சூப்பர் ஸ்டார் படத்தில் வயலின் வாசிக்கும் கீர்த்தி சுரேஷ்.. பிரபல இசையமைப்பாளர் சொன்ன சூப்பர் தகவல்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் படத்தில் நிச்சயம் வயலின் வாசிப்பார் என பிரபல இசையமைப்பாளர் கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இதேபோல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இசையிலும் ஆர்வம்

இசையிலும் ஆர்வம்

அதவாது மகேஷ் பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார். தேசிய விருது பெற்ற சிறந்த நடிகையான கீர்த்தி சுரேஷ், நடிப்பு மட்டுமின்றி இசையிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

வயலின் வாசிப்பதாக தகவல்

வயலின் வாசிப்பதாக தகவல்

ஏற்கனவே பலமுறை தான் வயலின் வாசிக்கும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தான் நடிக்கும் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வயலின் வாசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிச்சயமாக வயலின் வாசிக்கிறார்

நிச்சயமாக வயலின் வாசிக்கிறார்

சர்க்காரு வாரி பாட்டா படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் தமன் இந்த தகவலை கூறியுள்ளார். ரசிகர் ஒருவர் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாடல் பாடுகிறாரா என கேடுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள தமன், கீர்த்தி சுரேஷ் நிச்சயமாக வயலின் வாசிக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

புரமோஷன் பாடலில் வயலின் பிட்

புரமோஷன் பாடலில் வயலின் பிட்

படத்தில் கீர்த்தி சுரேஷ் வயலின் வாசிப்பதாக பதிவிட்டுள்ள தகவலை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். படத்தின் புரமோஷன் பாடலின் கீர்த்தி சுரேஷின் வயலின் பிட்டை தமன் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 1ஆத் தேதி ரிலீஸ்

ஏப்ரல் 1ஆத் தேதி ரிலீஸ்

பாடல் வெளியான பிறகே அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவரும். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி வரும் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X