சேலையை தூக்கி வாரி.. லபோதிபோ கத்திக்கொண்டு ஓடும் கீர்த்தி சுரேஷ்.. என்ன விஷயம்னு பாருங்க!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் சேலைக் கட்டிக்கொண்டு லபோதிபோ என ஓடும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கீதாஞ்சலி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

டாப் நடிகையாக..
தொடர்ந்து பல படங்கள்ல நடித்த வரும் கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தேசிய விருது நடிகை
2017ஆம் ஆண்டு அவர் நடித்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக உள்ளார்.

இன்ஸ்டாவில் வீடியோ
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஓரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

போட்டை நெருங்கியதும்
அதில் போட்டில் பயணம் செய்வதற்காக நிற்குமாறு கையை காட்டிவிட்டு ஓடுகிறார் கீர்த்தி சுரேஷ். சேலைக் கட்டிக்கொண்டு லபோதிபோ என கத்தியப்படியே ஓடுகிறார். அவரை பின்தொடர்ந்தப் படியே கேமராவும் செல்ல இறுதியில் போட்டை நெருங்கியதும் யாரையோ தேடுகிறார்.
என்னா ஓட்டம்
பின்னர் போதும் என கேமராவையும் நிறுத்த சொல்கிறார். இந்த வீடியோவுக்கு வீக்கென்டை நோக்கி ஓடுவது போல என கேப்ஷன் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த நெட்டிசன்கள், ப்பா என்னா ஓட்டம் என பிரமித்து போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











