‘விடுதலை‘க்காக காத்திருக்கிறேன்… ஆல் தி பெஸ்ட் சூரி அண்ணா… கீர்த்தி சுரேஷ் ட்வீட்!

சென்னை : விஜய்சேதுபதி, சூரி நடிக்கும் படத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கி உள்ளது.

இந்த படத்தில் சூரி போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கைதியாகவும் நடித்துள்ளனர்.

சூரி ஹீரோவாக

சூரி ஹீரோவாக

தேசிய விருது பெற்ற தனுஷூனின் அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், சூரி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களை பெற்றது. அந்த போஸ்டரில் சூரி கான்ஸ்டபில் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் இருந்தனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரி நெகிழ்ச்சி

சூரி நெகிழ்ச்சி

இந்நிலையில் நடிகர் சூரிதனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தஇயக்குனர் வெற்றிமாறன் அண்ணனுக்கும், இசைஞானி ஐயா அவர்களுக்கும், எல்ரெட் குமார் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். புதிய பரிமாணத்தில் மாமா விஜய்சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

ரொம்ப நன்றி தங்கச்சி

ரொம்ப நன்றி தங்கச்சி

இந்நிலையில், இப்படத்தில் நடித்து வரும் நடிகர் சூரிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரொம்ப ஆர்வமூட்டுவதாக உள்ளது. என்னால் காத்திருக்க முடியவில்லை, ஆல் தி பெஸ்ட் சூரி அண்ணா என்று பதிவிட்டுள்ளார். இதற்கு சூரியும் ரொம்ப நன்றி தங்கச்சி எனப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X