காதலை சொல்லி 29 வருஷம் ஆச்சு.. கணவரை நினைத்து நெகிழ்ந்து போன குஷ்பு!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 35 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வரும் நடிகை குஷ்பு. பிரபல இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்கள் தனது கணவர் கணவர் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

நடிகை குஷ்பூ தயாரிப்பாளர், நடிகை, சின்னத்திரை நடிகை, ரியாலிட்டி ஷோ நடுவர் என பன்முகம்களை காட்டி வருகிறார். இதனிடையே அரசியலிலும் சிறப்பாக வரும் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் அடுத்தடுத்த பிசியான ஷெட்யூலிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய பிட்னஸ் உள்ளிட்டவற்றிலும் கவனத்துடன் செயல்பட்டு வரும் குஷ்பு, சிறப்பான டயட் மற்றும் வொர்க் அவுட்களால் ஸ்லிம்மாகியுள்ளார்.

actress khusboo sundar shared husband photos on instagram

நடிகை குஷ்பு:90காலகட்டத்தில், மிகவும் பிசியாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் குஷ்பூ. இவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள். புசுபுசு இட்லிக்கு குஷ்பூ இட்லி என்று பெயர் வைத்தும் மகிழ்ந்தனர் ரசிகர்கள். அந்த அளவிற்கு தன்னுடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் குஷ்பூ. இவர், ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

காதல் திருமணம்: நடிகை குஷ்பூ, சுந்தர் சி இயக்கிய முறைமாமன் படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஐந்து ஆண்டுகள் காதலித்து 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வளர்ந்து பெரியவர்களாகியுள்ள நிலையில், இவர்களில் ஒருவர் நடிப்பிலும் மற்றவர் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

29 வருஷம் ஆச்சு: இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுந்தர்.சி தனது காதலை வெளிப்படுத்திய தினம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், 22 பிப்ரவரி 1995ல் இருந்து 22 பிப்ரவரி 2024 வரை நம்முள் எதுவும் மாறவில்லை. இருவருடைய ப்ளஸ், மைனஸ் என அனைத்தையுமே ஏற்றுக் கொண்டு இத்தனை ஆண்டுகள் அன்பாகவும், ஆதரவாகவும் கடந்து வந்துள்ளோம். இந்த விஷயம்தான் நமது குடும்பத்தை அழகாக வைத்து இருக்க உதவுகிறது. என்னிடம் நீங்கள் காதலை வெளிப்படுத்தி, அதற்கு நான் சம்மதித்து 29 வருடங்கள் கடந்து விட்டது. நான் அப்போது எடுத்த முடிவு சரி என்பதை இப்போது வரை நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள். 29 வருடங்கள் மாறாத அன்பு என்றும் நிலைத்திருக்கும் என்று குஷ்பு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X