ரஜினி யாரு கேங்.. சண்டை போட்டுக்கொண்ட மீனா - குஷ்பு.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: ரஜினி யாருக்கு ரொம்ப நெருக்கம் என நடிகைகள் மீனாவும் குஷ்புவும் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை இயக்குநர் சிவா இயக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை குஷ்புவும், நடிகை மீனாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்கள்.

சன் ஸ்டூடியோ
மேலும் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

சண்டை
இதில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மீனாவும் குஷ்புவும் ரஜினிக்காக சண்டைபோடும் வீடியோ வைரலாகி வருகிறது.

குஷ்பு மீனா சண்டை
அப்போது, ரஜினி யார் கேங் என்று இருவரும் செல்ல சண்டை போட்டுக்கொண்டனர். நடிகை மீனா அவர் எங்களின் கேங் என்றும் நடிகை குஷ்பு ரஜினி தங்களின் கேங்கை சேர்ந்தவர் என்றும் சண்டை போட்டுக்கொண்டனர்.

நீங்கள் குழந்தைகள்
அப்போது குஷ்பு நாங்கள் 80ஸ் செலிபிரேட் செய்தோம், 80ஸ்தான் தமிழ் சினிமாவின் கோடல்டன் பீரியட் என ஆதாரங்களை தருகிறார். மேலும் நீங்கள் எல்லாம் குழந்தைகள், ஜூனியர்ஸ் என்றும் மீனாவை கலாய்க்கிறார் குஷ்பு.

என்னை நேசித்தார்
இதனை தொடர்ந்து ரஜினி எங்களை நேசிக்கிறார் என்று கூறுகிறார் மீனா. அதற்கும் தடாலடி பதில் கொடுக்கும் குஷ்பு, அவர் என்னை நேசித்தார் என்று ஒரே போடாக போட்டு மீனாவின் வாயை அடைத்துவிட்டார்.

சண்டை போடாதீங்க
இந்த வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், சண்டை போட்டுக்காதீங்க ஏட்டுய்யா.. ரெண்டு பேரும் படத்துல இருக்கீங்க என கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











