Khushbu: அழகின் ரகசியம் பகிர்ந்த குஷ்பூ.. என்னது இதுல ஹேர் -ஃபேஸ் பேக்கா!
சென்னை : நடிகை குஷ்பூ 90களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.
இவரது துறுதுறு நடிப்பு, அழகு, கவர்ச்சியால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த குஷ்பூ, ஒருகட்டத்தில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.
இந்நிலையில் தற்போது இவர், தயாரிப்பாளர், நடிகை, ரியாலிட்டி ஷோ நடுவர், சின்னத்திரை நடிகை என பன்முகம் காட்டி வருகிறார்.
அழகு ரகசியம் பகிர்ந்த குஷ்பூ:நடிகை குஷ்பூ ரஜினி, கமல், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இதயங்களை கவர்ந்தவர். இவருக்கு கோயில் கட்டிய தமிழக ரசிகர்கள், இட்லிக்கு இவரது பெயரை வைத்து மகிழ்ந்தனர். தன்னுடைய துறுதுறு நடிப்பு, அழகு மற்றும் கவர்ச்சியாக ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்ட குஷ்பூ, அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக தொடர்ந்து இருந்தார்.

இதனிடையே, இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த குஷ்பூவிற்கு அவர்மீது ஏற்பட்ட அன்பு, காதலாக மாற, இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். தமிழக மருமகளன குஷ்பூ மற்றும் சுந்தர் சிக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் தொடர்ந்து நாயகியாகவும் அறிமுகமான குஷ்பூ, தன்னுடைய தந்தையின் தவறான வழிநடத்துதலால் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தனனுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
திருமணமான பின்பு அதிகமாக படங்களில் நடிப்பதை தவிர்த்த குஷ்பூ, தன்னுடைய குடுமபம், குழந்தைகள் என அழகான வாழ்க்கைக்கு அடித்தளமிட்டார். ஆனாலும் தன்னுடைய கேரியரை கைவிடாமல், சின்னத்திரைப்பக்கம் கவனத்தை திருப்பினார். தொடர்ந்து கலர்புல்லான சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுத்தார். தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களிலும் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இவரது மீரா தொடர் ரசிகர்களை கவர்ந்தது.
இவ்வாறு பன்முகம் காட்டிவரும் குஷ்பூ, அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வளர்ந்த இரு பெண்களுக்கு அம்மாவாக இருந்தபோதிலும் தன்னுடைய அழகு மற்றும் பிட்னசிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கொழுகொழுவென இருந்த இவர், சமீபத்தில் ஸ்லிம்மானார், இவரது இந்த புதிய கெட்டப்பிற்கு ரசிகர்கள் ஆதரவையும் அதே நேரத்தில் நன்றாகவே இல்லை என்ற விமர்சனங்களையும் வைத்தனர்.

ஆனால் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக நடத்திவரும் குஷ்பூ, தற்போது இந்த கெட்டப்பில் அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதனிடையே, தற்போது தன்னுடைய அழகின் ரகசியத்தை குஷ்பூ பகிர்ந்துள்ளார். வாழைப்பழத்தை பேஸ்ட் செய்து அதை தன்னுடைய தலைமுடியிலும் முகத்திலும் அவர் பேக்காக போட்டுள்ளார்.
வீட்டிலேயே செய்யப்படும் இதுபோன்ற பேக்குகள் அதிகமான பலன்களை கொடுக்கும் என்றும் வாரயிறுதி நாட்களில் தான் இதுபோல பேக்குகளை அப்ளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குஷ்பூ -சுந்தர் சி தயாரிப்பில் அடுத்ததாக அரண்மனை 4 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், விரைவில் ரிலீசாகவுள்ளதாக தெரிகிறது. முன்னதாக சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம் 2 படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.


Click it and Unblock the Notifications











