குஷ்புக்கு வயசு 53னா.. இல்ல 23னா..இணையத்தில் டிரெண்டாகும் போட்டோஸ்!

சென்னை: (Khushbu) நடிகை குஷ்பு தன்னுடைய 53ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர்.

அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை பல பிஸியாக இருக்கிறார்.

actress khushbu 53rd birthday celebration photos trending on social media

நடிகை குஷ்பு: 1989 ஆம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு. அந்த திரைப்படத்திற்கு முன்பாக ரஜினி மற்றும் பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்த படங்களில்: இதையடுத்து,வெற்றிவிழா, கிழக்கு வாசல், தாலாட்டு பாடவா, நடிகன், மை டியர் மார்த்தாண்டம், பாட்டுக்கு நான் அடிமை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.இவரின் நடிப்பை மெச்சும் விதமாக சின்னத்தம்பி திரைப்படத்தில் நந்தினி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பட்டி தொட்டி எங்கும் குஷ்புவின் பெயர் எதிரொலித்தது.

actress khushbu 53rd birthday celebration photos trending on social media

முன்னணி நடிகர்களுடன்: ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கிய நடிகை குஷ்பு, ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு போட்டு வரும் வித விதமான ஜாக்கெட்டுகள் தான் பெண்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

க்யூட் குஷ்பு: திரைத்துறையில் இவர் நுழைந்து கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆனாலும், குஷ்பு மீதான ஈர்ப்பு இன்னும் குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கும்முனு இருந்த குஷ்பு, கடந்த சில மாதங்களாக தனது உடல் எடையைக் உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ளார்.

actress khushbu 53rd birthday celebration photos trending on social media

குஷ்புக்கு வயசு 53னா... 23னா: இந்நிலையில் நடிகை குஷ்பு செப்டம்பர் 29ந் தேதி தனது 53வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படங்களை தற்போது அவரது மகள் வெளியிட்டுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குஷ்புவின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தில்,குஷ்புக்கு வயசு 53னா... 23னா என்று சந்தேகம் வரும் அளவிற்கு மெரூன் நிற புடவையில் அழகு தேவதை போல் ஜொலிக்கிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள பர்த்டே செலபிரேஷன் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X