ஆர்த்தியின் கண்ணீர் பதிவு.. குஷ்பு, ராதிகா கூறிய அந்த வார்த்தை.. இதெல்லாம் ரவிக்கு நல்லது இல்ல!
சென்னை: அழகான நட்சத்திர தம்பதிகளின் பட்டியலில் இருந்த அன்பான ஜோடி தான் ரவி மோகன், ஆர்த்தி தம்பதியினர். ஆனால், தற்போது இவர்கள் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் ஏறி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு காரணம் ஆர்த்தி தான் என்று பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், நேற்று தயாரிப்பாளர ஐசரி கணேஷின் இல்ல திருமணத்தில், பாடகி கெனிஷாவுடன் ஜோடி போட்டு ரவி மோகன் வந்தது, பலரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்துத் செய்ய முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். கோர்ட்டில் விவாகரத்துத் வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். ரவியின் இந்த முடிவு, தன் கவனத்திற்கு வராமல் எடுக்கப்பட்ட முடிவு என ஆர்த்தி கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன், மேட்சிங் மேட்சிங் உடையில் வந்து, புதுமண தம்பதிகள் போல போட்டோவிற்கு போஸ் கொடுத்து இருந்தனர்.
இவர்கள் இருவரும் ஜோடியாக வந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அதைப்பார்த்த பலர், ரவி மோகன் இப்படி கீழ்தனமாக நடந்து இருக்கக்கூடாது என்றும், ஆர்த்தியிடம் இருந்து சட்டரீதியாக விவாகரத்து கிடைக்கவே இல்லை அதற்குள் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டீர்களா என்றும் இணையத்தில் பலர், ரவி மோகனை திட்டி தீர்த்து வந்தனர்.
ஆர்த்தி ரவி: இதைத்தொடர்ந்து, ஆர்த்தியும் உருக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ஒரு காலத்தில் மகன்களை தனது பெருமை என்று அழைத்தவரிடமிருந்து இப்போது உணர்ச்சி ரீதியாகவோ அல்லது பண ரீதியாகவோ எந்த பதிலும் இல்லை. நாங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதை இப்போது எதிர்கொள்கிறோம். பொது வாழ்க்கையில் உங்கள் பாத்திரங்களை மாற்றலாம். ஆனால் உண்மையை மாற்றி எழுத முடியாது. ஒரு தந்தை என்பது வெறும் பட்டப்பெயர் மட்டுமல்ல. அது ஒரு பொறுப்பு. எனது வார்த்தைகளிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். ஆனால், பிரபஞ்சம் அமைதியாக நினைவு கூறுபவைகளில் இருந்து அல்ல. நானும், சட்டமும் முடிவு செய்யும்வரை நான் ஆர்த்தி ரவியாகவேத்தான் இருப்பேன். சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை என்னை முன்னாள் மனைவி என்று அழைப்பதைத் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இது பழிவாங்கும் செயல் இல்லை, ஒரு தாய் நெருப்பில் அடியெடுத்து வைப்பது, சண்டையிடுவதற்காக அல்ல, பாதுகாப்பிற்காக என உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார்.

குஷ்பு சொன்ன அந்த வார்த்தை: ஆர்த்தியின் இந்த கண்ணீர் பதிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் நடிகை குஷ்பு, நடிகை ராதிகா ஆகியோர் ஆர்த்திக்கு ஆதரவாக தெரிவித்துள்ளனர். குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில், ஒரு தாயின் உண்மை வரும் நாட்களில் ஒரு சான்றாக நிற்கும் என பதிவிட்டுள்ளார். அதே போல ராதிகா சரத்குமார், ஆர்த்தியின் அறிக்கையை பகிர்ந்து இந்த நேரத்தில் தான் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் எம்மோஜிகளை பதிவிட்டுள்ளார். இவர்கள் மட்டுமில்லாமல் பலரும் ரவி மோகனின் இந்த செயலை கண்டித்து வருகின்றனர்.
பூமராங் போல தாக்கும்: ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நடிகை குஷ்பு தான். ரவி மோகன், ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்த போது, அதை கடுமையாக கண்டித்து ஒரு பதிவினை போட்டு இருந்தார். அதில், ஒரு உண்மையான மனிதன் எப்போதும் உயர்ந்து நிற்கிறான். அவனின் தேவை, ஆசை, விருப்பம் என அனைத்தும் குடும்பத்தின் முன் இரண்டாம் பட்சமாகத்தான். திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். தவறுகள் நடக்கும். அதற்காக இத்தனை ஆண்டுகள் கட்டி பாதுகாத்து வந்த வாழ்க்கையை கைவிடுவது ஒருபோதும் சரியானதாக இருக்காது. சுயநலத்தோடு நாம் எடுக்கும் முடிவு பெரும்பாலும் பூமராங் போல திரும்பவும் நம்மையே தாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது என தனது ஆதங்கத்தை கொட்டி இருந்தார்.


Click it and Unblock the Notifications











