20 வருஷம் ஆயிடுச்சு எதுவும் மாறல.. திருமண நாளில் கணவர் சுந்தர் சி குறித்த ரகசியத்தை சொன்ன குஷ்பு!

சென்னை தனது 20வது திருமண நாளை கொண்டாடும் நடிகை குஷ்பு, தனது கணவர் குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

Recommended Video

Nazriya Pendant Secret | Kushbhu Sundar C Silver jubliee | Anegan Actress with Corona

நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல், சத்தியராஜ், கார்த்தி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார் குஷ்பு.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு. அரசியலிலும் தீவிரமாக உள்ளார்.

குஷ்பு திருமண நாள்

குஷ்பு திருமண நாள்

அதோடு தற்போதும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் குஷ்பு, தயாரிப்பாளராகவும் உள்ளார். மேலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார் நடிகை குஷ்பு. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு இன்று தனது 20 வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

கடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி நடிகை குஷ்புவும் இயக்குநர் சுந்தர் சியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தங்களின் திருமண போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை குஷ்பு, தங்களின் 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை குறித்தும் டிவிட்டியிருக்கிறார்.

எதுவும் மாறல

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்த 20 ஆண்டுகளில் எதுவும் மாறவில்லை.. இப்போதும் நான் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன், நீங்கள் ஒரு புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். தன்னுடைய சொந்த திருமணத்திற்கு தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான்.. ஹேப்பி ஆன்னிவர்சரி என் பலத்தின் தூணே.. இவ்வாறு நடிகை குஷ்பு டிவிட்டியுள்ளார்.

காதலை சொன்னீர்கள்

காதலை சொன்னீர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை குஷ்பு, 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் என்னிடம் காதலை சொன்னீர்கள் என்று கூறி இருவரும் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக இருக்கும் போட்டோவை வெளியிட்டார். தங்களின் சில்வர் ஜூப்ளியை கொண்டாடிய குஷ்பு , உங்கள் கண்களை பார்க்கும் போது நீங்கள் இன்னமும் என்னை வெட்கப்பட வைக்கிறீர்கள். நீங்கள் சிரிக்கும் போது நான் இன்னமும் பலவீனமடைகிறேன். நீங்கள் தான் எனக்கு எல்லாம்.. என பதிவிட்டு சுந்தர் சியின் மீதான காதலை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X