25 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்லதான்.. ஞாபகம் இருக்கா.. சுந்தர் சி - குஷ்புவின் சில்வர் ஜூப்ளி!

சென்னை: கணவரான இயக்குநர் சுந்தர் சி தன்னிடம் காதலை சொல்லி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகை குஷ்பு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமானவார். 1980களில் படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.

இதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அறிமுகமானார் குஷ்பு, சென்னையில் செட்டிலான குஷ்பு, தெலுங்கு, தமிழ், மலையாளம் என 150க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

சுந்தர்சியுடன் திருமணம்

சுந்தர்சியுடன் திருமணம்

இதில் தமிழில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் குஷ்பு. ரஜினி, கமல் என் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார் குஷ்பு, 2000 ஆம் ஆண்டு நடிகை குஷ்புவும் இயக்குநர் சுந்தர் சியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

அரசியலிலும் தீவிரம்

அரசியலிலும் தீவிரம்

தற்போதும் அக்கா, அண்ணி கேரக்டர்களிலும் கெஸ்ட் அப்பீயரன்ஸிலும் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் தலைவர் 168 படத்திலும் நடிகை குஷ்பு நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி சீரியல், புரடெக்ஷன் என்றுள்ள நடிகை குஷ்பு அரசியலும் தீவிரமாக உள்ளார்.

சில்வர் ஜூப்ளி

சில்வர் ஜூப்ளி

அதே நேரத்தில் எந்த விழா விசேஷம் என்றாலும் குடும்பத்துடன் கொண்டாடவும் தவறுவதில்லை குஷ்பு. இந்நிலையில் நடிகை குஷ்பு தனது கணவரான இயக்குநர் சுந்தர் சி தன்னிடம் காதலை சொன்னதன் 25 ஆண்டுகள் ஆனதன் சில்வர் ஜூப்பிளியை சிலிர்ப்புடன் கொண்டாடி வருகின்றார்.

புரபோஸ் பண்ணீங்க

புரபோஸ் பண்ணீங்க

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை குஷ்பு இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவு ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார். அதில் 25 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நீங்கள் என்னிடம் காதலை வெளிப்படுத்தினீர்கள், இத்தனை ஆண்டுகளில் இந்த போட்டோக்களை தவிர வேறு எதுவும் மாறவில்லை.

எனக்கு எல்லாமும்

நான் இன்னமும் அதேபோன்றுதான் உங்களை நேசிக்கிறேன், உங்கள் கண்களை பார்க்கும் போது நீங்கள் இன்னும் என்னை வெட்கப்ட வைக்கிறீர்கள். நீங்கள் சிரிக்கும் போது நான் இன்னமும் பலவீனமடைகிறேன். நீங்கள் தான் எனக்கு எல்லாம்.. இவ்வாறு தனது சில்வர் ஜூப்ளியை கொண்டாடி வருகிறார் நடிகை குஷ்பு.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

மேலும் நடிகை குஷ்பு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக இருக்கும் போட்டோவையும் தற்போதுள்ள போட்டோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குஷ்புவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X