Khushbu: 52 வயதிலும் என்னம்மா டான்ஸ் ஆடுறாரு குஷ்பு.. இந்த சந்தோஷத்துக்கு அந்த ஹீரோ தான் காரணமாம்!
சென்னை: நடிகை குஷ்பு தனது வீட்டில் சாதாரண சுடிதார் உடையை அணிந்துக் கொண்டு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
சினிமா, அரசியல் என அசத்தி வரும் நடிகை குஷ்பு சின்னத்திரை ரியாலிட்டி தொடர்களுக்கும் நடுவராக இருந்து அசத்தி வருகிறார்.
எப்போதுமே குறையாத அழகுடன் இருக்கும் குஷ்புவின் லேட்டஸ்ட் நடன வீடியோ ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

கேன்ஸில் ஜொலித்த பட்டுச்சேலை:
நடிகை குஷ்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்த நிலையில், தொடர்ந்து அவர் சேலை அணிந்து போட்டோ போட்டாலும், மாடர்ன் உடையில் மாஸ் காட்டினாலும் லைக்குகள் குவிகின்றன.
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு மற்ற நடிகைகள் போல கவர்ச்சி கவுன் எல்லாம் அணிந்து செல்லாமல் கம்பீரமாக பட்டுச் சேலையை அணிந்து கொண்டு பலரது பாராட்டுக்களை அள்ளினார்.

வீட்டில் செம ஆட்டம் போட்ட குஷ்பு:
நடிகை குஷ்பு சினிமா, அரசியல் என இந்த வயதிலும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறார். கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் வெளிநாட்டில் படிக்கும் தனது மகளை சந்தித்து விட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது வீட்டில் நடிகை குஷ்பு ரணதீரா படத்தின் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ள வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

கன்னட நடிகர் பிறந்தநாள்:
1988ம் ஆண்டு கன்னடத்தில் குஷ்பு நடித்து வெளியான ரணதீரா பாடலுக்குத் தான் இப்படியொரு ஆட்டத்தை குஷ்பு போட்டுள்ளார்.
அந்த படத்தில் ஹீரோவாக நடித்த பிரபல கன்னட நடிகர் வி. ரவிச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கான பிறந்தநாள் பரிசாகவே இப்படியொரு ஆட்டத்தை குஷ்பு வெளியிட்டுள்ளார். மேலும், கன்னட ரசிகர்களுக்கு தான் நிறையவே கடன் பட்டு இருப்பதாகவும், அவர்கள் தனக்கு காட்டிய அன்பு மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் கமெண்ட்ஸ்:
ப்பா சூப்பரான டான்ஸ், அப்படியே அந்த படத்தில் பார்த்த மாதிரியே இருக்கு என்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு குஷ்பு டான்ஸ் ஆடுறதை பார்க்குற பாக்கியம் கிடைச்சிருக்கு எங்களுக்கு என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜியையும் ரசிகர்கள் பறக்கவிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











