அடடா குஷ்பு மகளா இது.. என்னா மாற்றம்.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகை குஷ்புவின் மகள் அனந்திதாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

நடிகை குஷ்பு பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் அசத்திய அவர், பின்னர் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

1980, 1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு இன்றும் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி, அரசியல் என சுழன்று வருகிறார்.

ரஜினியுடன் குஷ்பு

ரஜினியுடன் குஷ்பு

தற்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் நடிகை குஷ்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார் குஷ்பு. இதன் படப்பிடிப்புக்காக அண்மையில் ஹைதராபாத் சென்று வந்தார் குஷ்பு. இந்த போட்டோக்கள் வைரலானது.

இரண்டு மகள்கள்

இரண்டு மகள்கள்

மகாராஷ்டிர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை குஷ்பு, 2000ஆம் ஆண்டில் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அவந்திக்கா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை குஷ்பு அரசியல், சினிமா என பிஸியாக இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதில் தவறுவதில்லை.

கிண்டல்

கிண்டல்

குடும்பத்துடன் வெளிநாடுகளில் சுற்றுலா, பண்டிகை கொண்டாட்டம் என கழிக்கும் குஷ்பு, தங்களின் கொண்டாட்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஒரு முறை அவரது மகள்களின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவர் உடல்வாகை பார்த்து கிண்டலடித்தனர்.

ரஜினியுடன் போட்டோ

இதனால் கடுப்பான குஷ்பு, அவர்களை படு கேவலமாய் திட்டி தீர்த்தார். இந்நிலையில் குஷ்புவின் இளையமகளான அனந்திதா அண்மையில் தலைவர் 168 படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது அவருடன் இணைந்து எடுத்த போட்டோவை நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.

எப்படி குறைசீங்க?

இந்நிலையில் அனந்திதா லேட்டஸ்ட்டாக எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் உடல் எடையை குறைத்து சிக்கென இருக்கிறார் அனந்திதா. அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள்.. ஓ மை காட் எப்படி இவ்வளவு எடையை குறைத்தீர்கள் என கேட்டுள்ளனர். மேலும் அழகாக இருக்கிறீர்கள் என்றும் கமென்ட் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X