நடிகை குஷ்புவுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை.. போட்டோவை பார்த்து பதறும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை குஷ்பு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து பேண்டெய்ட் போட்டிருக்கும் போட்டோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
Recommended Video
நடிகை குஷ்பு சினிமா, அரசியல் என பிஸியாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.
அவ்வப்போது அரசியல் ரீதியாக கருத்து கூறி சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். நேற்று இரவு தனது உடல் எடையை குறைத்த போட்டோவை ஷேர் செய்து அப்ளாஸை அள்ளினார்.

பதறும் ரசிகர்கள்
இந்நிலையில் தற்போது கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு கண்ணில் பேண்ட்டெய்டு ஒட்டப்பட்டுள்ளது. குஷ்புவின் இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் பதறி போயுள்ளனர்.

விரைவில் வருவேன்
அந்த போட்டோவுக்கு இன்று காலை கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதன் காரணமாக சில நாட்கள் டிவிட்டரில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும் விரைவில் திரும்பி வருவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மாஸ்க்குடன் செல்லுங்கள்
மேலும் கவனமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து தூரத்தை பின்பற்றுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த போட்டோவையும் பதிவையும் பார்த்த நெட்டிசன்கள் அவரையும் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

போட்டோ வைரல்
பலரும் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு என்ன பிரச்சனை என்றும், விரைவில் நீங்கள் நலம் பெற்று திரும்ப பிரார்த்திக்கிறோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர். குஷ்பு கண்ணில் அறுவை சிகிச்சை செய்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











