வாவ்.. உடம்பை வில்லாய் வளைத்து வொர்க்கவுட் செய்ததன் மாயம்.. குஷ்புவோட லேட்டஸ்ட் போட்டோஸ பாத்தீங்களா!

சென்னை: நடிகை குஷ்பு வொர்க்கவுட்டின் ரிசல்ட் என ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

Recommended Video

Aranmanai Kili Pragati WOW dance performance • Maina Nandhini, khushbu, Bhavana

நடிகை குஷ்பு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர். என்னதான் அரசியல், சினிமா, குடும்பம் என பிஸியாக இருந்தாலும் அனைத்தையும் ஏற்றம் இறக்கம் இல்லாமல் அசால்ட்டாக மேனேஜ் செய்து வருகிறார்.

அதே சமயம் உடல் நலனிலும் மிகுந்த அக்கறையுடன் உள்ளார் குஷ்பு. 50 வயதிலும் வொர்க் அவுட், யோகா என பல நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்

ஷூட்டிங் ஸ்பாட்

கொரோனா பயத்தால் வெளியே சென்றாலே டிரெஸ்க்கு மேட்சாக மாஸ்க்குடன் சென்று வருகிறார். தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்று வரும் குஷ்பு அவ்வப்போது வொர்க் பிளேஸ் என ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

வில்லாக வளைத்து

வில்லாக வளைத்து

50 வயது ஆன போதும் நம்ப முடியாத அளவுக்கு இளமையாகவும் அழகாகவும் உள்ளார் நடிகை குஷ்பு. அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்க்கும் ரசிகர்களும் இதையே கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடம்பை வில்லாக வளைத்து உடற்பயிற்சி மற்றும் யோகா செய்த போட்டோக்களை ஷேர் செய்தார் குஷ்பு.

ரொம்ப சிம்பிள்

ரொம்ப சிம்பிள்

அதனை பார்த்த பலரும், அவரது டெடிகெஷனை பாராட்டி தள்ளினர். இந்நிலையில் நடிகை குஷ்பு, தனது டிவிட்டர் பக்கத்தில் அவருடைய லேட்டஸ்ட் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் ஃபிரி ஹேர் மற்றும் போனி டைல் என அணிகலன்கள் ஏதும் இல்லாமல் ரொம்பவே சிம்பிளாக உள்ளார்.

பழைய டிரெஸ் ஃபிட்டாகுது

பழைய டிரெஸ் ஃபிட்டாகுது

ஆனால் அந்த போட்டோவுக்கு அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் தான் விஷயமே. அதாவது உங்களின் பழைய ஆடைகள் மீண்டும் உங்களுக்கு பொருந்தும்போது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். மேலும் #workoutresults #positivity #goodhealth #staysafe என்றும் அந்த போட்டோக்களுக்கு ஹேஷ்டேக்குகள் குறிப்பிட்டுள்ளார்.

எப்படி இப்படி?

எப்படி இப்படி?

இதன்மூலம் குஷ்பு எடையை குறைத்து தனது பழைய உடைய மீண்டும் உடுத்தியிருக்கிறார் என தெரிகிறது. குஷ்புவின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் எப்படி இப்படி எடையை குறைத்தீர்கள் என பிரமிப்புடன் கேட்டு வருகின்றனர்.

டிப்ஸ் கொடுங்களேன்..

டிப்ஸ் கொடுங்களேன்..

குஷ்புவின் போட்டோவை பார்த்து எப்படிமா இப்படி? முக்கி முக்கி டயட் இருந்து, ஒர்க் அவுட்டும் பண்ணி ஒரு மாசத்துல 4கிலோக்கு மேல குறையவே இல்லை. டிப்ஸ் ப்ளீஸ் சிஸ்டர் என கேட்டுள்ளார் இந்த ரசிகர்.

கொஞ்சம் கவனியுங்கள்

கொஞ்சம் கவனியுங்கள்

மற்றொரு நெட்டிசனான இவர், எப்போதான் உங்களுக்கு வயசு ஆகுமோ தெரியலயே என கேட்டுள்ளார். இன்னொரு ரசிகரான இவர், நீங்க ஸ்லிம்மா இருக்குறத பார்த்தா சந்தோஷமா இருக்கு. உங்கள் மகள்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என கூறியுள்ளார்.

இளமை திரும்புதே

இளமை திரும்புதே

இந்த நெட்டிசன், எந்த சோப்பு போட்டு குளிக்குறீங்க ? வரவர இளமை திரும்புதே.. அருமை.. கண்ணுபட்டுவிடும் என கூறியுள்ளார். குஷ்புவின் இந்த புதிய போட்டோக்களை பார்த்த இவர், 20 வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டீர்கள்.. என கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X