அவரு கூட நடிக்க பயமாவும் இருக்கு... அதே சமயத்துல.. உச்ச நடிகர் குறித்து டிவிட்டிய பிரபல நடிகை!
சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க பயமாக இருப்பதாக நடிகை குஷ்பு டிவிட்டியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் நடிக்கும் 168வது படத்தின் படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் தொடங்கியுள்ளது.
தலைவர் 168 என்ற இந்த படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

ரஜினிக்கு தங்கை
இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை குஷ்புவும் நடிகை மீனாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில்..
காமெடி நடிகர்களான சூரியும் சதீஷும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகை குஷ்பு கடந்த 21ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார்.
பதட்டம்
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். அதாவது ஹைதராபாத் வந்து சேர்ந்துவிட்டேன். தலைவர் 168ல் நடிப்பது ஒரே நேரத்தில் கொஞ்சம் பதட்டமாகவும் உற்சாகமாகவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
அசத்துவீங்க
குஷ்புவின் இந்த டிவிட்டை பார்த்த நடிகை ஆர்த்தி, கொண்டையில் தாழம்பூ தருணத்திற்காக காத்திருக்கிறோம். எப்போவும் போல அசத்துவீங்க அக்கா என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த குஷ்பு ஆர்த்திக்கு நன்றி கூறியிருக்கிறார்.

ரஜினிக்கு ஜோடி
நடிகை குஷ்பு, தமிழில் ரஜினி - பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் தான் அறிமுகமானார். அந்த படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக நடித்த அவர் பின்னர் மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











