நடிகை குஷ்புவின் 50வது பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.. டிரெண்டாகும் #HBDKhushbu

சென்னை: உலகிலேயே நடிகை ஒருவருக்கு கோயில் கட்டினார்கள் என்றால், அது நம்ம குஷ்புவுக்கு மட்டும் தான் என்று சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த நடிகை குஷ்புவின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

15 வயதில் பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கிய குஷ்பு, இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

ஹேப்பி பர்த்டே குஷ்பு

ஹேப்பி பர்த்டே குஷ்பு

1970ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மும்பையில் பிறந்த நடிகை குஷ்புவுக்கு இன்று 50வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தனது கணவர் சுந்தர். சி மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை குஷ்புவுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். #HBDKhushbu என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள்

தல அஜித்துடன் நடிகை குஷ்பு இணைந்து எடுத்துக் கொண்ட த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு தல சார்பாக அஜித் ரசிகர்கள் நடிகை குஷ்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். மலை பிரதேசம் அருகே இருவரும் செம க்யூட்டாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த குஷ்பு அதனை லைக் செய்துள்ளார்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

மன்னன், அண்ணாமலை, தர்மத்தின் தலைவன், என ஏகப்பட்ட படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த நடிகை குஷ்பு அடுத்ததாக அண்ணாமலை படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை குஷ்புவின் 50வது பிறந்தநாளை ரஜினி ரசிகர்களும் வாழ்த்துக்களை வாரி இரைத்து கொண்டாடி வருகின்றனர்.

தயாரிப்பாளர் குஷ்பு

தயாரிப்பாளர் குஷ்பு

நடிகர் ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் மிகச்சிறந்த தயாரிப்பாளருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. லாட்ஸ் ஆஃப் லவ் என ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். ஆவ்னி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கலகலப்பு 2 படத்தில் ஜீவா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹேப்பி பர்த்டே அக்கா

ஹேப்பி பர்த்டே அக்கா

குஷ்புவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் ஜெயம் ரவி, ஹேப்பி பர்த்டே அக்கா என்றும், நம்மோட ஃபேமிலி டைமை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்றும் பதிவிட்டு, கடவுள் உங்களை வாழ்த்தட்டும் என ட்வீட் செய்துள்ளார். சுந்தர். சி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பான சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த படம் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

ஹன்சிகா வாழ்த்து

ஹன்சிகா வாழ்த்து

குட்டி குஷ்பு என அழைக்கப்பட்ட நடிகை ஹன்சிகா மோத்வானியும் நடிகை குஷ்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மறக்காமல் தெரிவித்துள்ளார். தான் சந்தித்ததிலேயே மிகவும் கனிவான நபர் குஷ்பு மேடம் தான் என்றும், வரும் ஆண்டு சிறந்த ஆண்டாக விளங்கட்டும் என்றும் வாழ்த்தி உள்ளார்.

குஷ்பு நன்றி

குஷ்பு நன்றி

ஏகப்பட்ட ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் நடிகை குஷ்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அவர்களுக்கு நடிகை குஷ்புவும் நன்றி ட்வீட் செய்து வருகிறார். அடுத்த சம்மரில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் குஷ்பு எப்படி நடித்து அசத்தி உள்ளார் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X