குஷ்பு வயசானா எப்படி இருப்பாங்க? அவங்களே போட்ட போட்டோ! #oldfacechallenge
Recommended Video
சென்னை: ஓல்டு ஃபேஸ் சேலஞ்ச் வைரலாகி வரும் நிலையில் நடிகை குஷ்புவும் இதில் பங்கேற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் தற்போது ஃபேஸ் ஆப் படு சூடாக ட்ரென்ட்டாகி வருகிறது. அதாவது இந்த ஆப் மூலம் வயதானால் நமது தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதில் கிரிக்கெட் வீரர்களின் போட்டோக்கள் அப்லோட் செய்து ஓல்டு ஃபில்டர் போட்டதில் கிடைத்த போட்டோக்கள் நேற்று வைரலான. இதைத்தொடர்ந்து சினிமா நட்சத்திரங்களும் இந்த ஆப்பை முயற்சி செய்தனர்.
இந்நிலையில் இன்று #oldfacechallenge சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாகியுள்ளது. இதனை முன்னிட்டு நடிகை குஷ்புவும் இந்த ஓல்டு ஃபேஸ் சேலஞ்சில் பங்கேற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது போட்டோவை ஓல்டு ஏஜ் பில்டரில் போட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தோல் சுறுக்கமடைந்தாலும் வயதான தோற்றத்திலும் அழகாகத்தான் இருக்கிறார் குஷ்பு.
குஷ்புவின் அந்த போட்டோவை பலரும் லைக் செய்துள்ளனர். சிலர் ஷேர் செய்துள்ளனர். இதேபோல் பாலிவுட் நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான், ஹாலிவுட் பிரபலங்கள் நிக் சகோதரர்கள் என அனைவரும் தங்களது ஃபேஸ் ஆப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











