விச் இஸ் பெட்டர்.. குஷ்புவின் ட்விட்டர் போஸ்ட்.. இரண்டுமே சூப்பர்.. குழம்பிய ரசிகர்கள்!

சென்னை :1984ஆம் ஆண்டு எடுத்த பழைய புகைப்படத்தையும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தையும் இணைத்து "விச் இஸ் பெட்டர்" என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை குஷ்பு .

Recommended Video

Oh Andha Naatkal Retro Girls | Khushbu, Radhika Sarathkumar, Urvasi, Suhashini

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் நடிகர், நடிகைகள் அனைவரும் தனது சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கின்றனர். வீட்டில் போட்டோஷூட்ஸ் எடுத்தும், வீடியோக்கள் எடுத்து அதனை பதிவிட்டு வருகின்றனர்.

சில நடிகர், நடிகைகள் தனது த்ரோ பாக் புகைப்படம் என்று தனது பழைய புகைப்படங்களை தூசுதட்டி அதனை வெளியிட்டு வைரலாகிக்கொண்டு இருக்கின்றனர் .

 தனி இடம்

தனி இடம்

1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. எத்தனையோ ஒல்லியான ஹீரோயின்கள் இருந்தாலும், கொஞ்சம் பப்ளியான தேகத்துடன் இருக்கும் குஷ்பு தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 குஷ்பு இட்லி

குஷ்பு இட்லி

குஷ்புவின் ஈர்ப்பு மிகுந்த சிரிப்பினாலும், குண்டான தேகத்தாலும் பல ரசிகர்களை இவர் கட்டிப்போட்டார் என்பது தான் உண்மை. குஷ்புவிற்கு கோவில் கட்டி கொண்டாடும் அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் இருந்து இருக்கிறார்கள். சாதாரண இட்லியை கூட குஷ்பு இட்லியாக மாற்றிய பெருமை என்றும் குஷ்புவையே சேரும்.

 பலரின் பொறாமை

பலரின் பொறாமை

80களில் அவருக்கு இருந்த ரசிகர்களை விட, இன்றும் அவருக்கு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பது தான் உண்மை.பல ஹீரோயின்களும் இவரின் மேல் பொறாமை படும் அளவிற்கு அழகு என்பது இவரை பார்க்கும் போதே தெரிகிறது. எத்தனை ஆண்டுகள் இவரின் அழகு கூடிக்கொண்டே தான் போகிறது. குஷ்பு என்றும் இளமை என்று தான் சொல்ல வேண்டும் .

 இணையதளத்தில் பிஸி

இணையதளத்தில் பிஸி

எப்போதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் குஷ்பு,சில அரசியல் சார்ந்த ட்விட்களையும் சில சமயங்களில் வெளியிடுவார். அதனால் பல வாக்குவாதங்களும் பல சண்டை சர்ச்சரவுகளும் வந்து போகும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இவர் போடும் ட்விட்களுக்கு ரிப்ளை செய்ய தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கிறார்.

 பேசியல் முதல் சமையல் வரை

பேசியல் முதல் சமையல் வரை

தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் இருக்கும் குஷ்பு தினம் தினம் அவர் செய்யும் வேலைகளை வெளியிட்டு கொண்டு இருக்கிறார். முகத்திற்கு பேசியல் முதல் சமையல் வரை அனைத்தையும் போட்டோவாக எடுத்து வெளியிடுகிறார். சமீபத்தில் அவர் வீட்டில் இருக்கும் அழகான பொம்மைகளையும், வீட்டையும் சுற்றி சுற்றி வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தார்.

 போட்டோ எடுத்த சுந்தர் சி

போட்டோ எடுத்த சுந்தர் சி

சமீபத்தில் குஷ்பு புடவையில் இருக்கும் பல அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார், அதனை பார்த்த அனைவரும் வியந்தே போனார்கள். அப்போ பார்த்த குஷ்பு இன்னும் அப்படியே இருக்காங்களே என்று சொல்லாத ஆளே இல்லை. இப்போதான் திரைக்கதையில் ஒரு ட்விஸ்ட் அது என்ன என்று பார்த்தால், அந்த புகைப்படத்தை எடுத்து நம்ம சுந்தர் சி தானாம். என்னமா போட்டோ எடுத்து இருகாருயா என்று பலரும் பாராட்டினர்.

 குழம்பிய ரசிகர்கள்

குழம்பிய ரசிகர்கள்

சமீபத்தில் குஷ்பு தனது பழைய புகைப்படத்துடன், புது புகைப்படத்தையும் போட்டு விச் இஸ் பெட்டர் என்ற கேள்வியையும் அவர் கேட்டு உள்ளார். அதனை பார்த்த ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்த போட்டோவை பார்த்தால் இது அழகா இருக்கு, புது போட்டோவை பார்த்தால் அதுவும் அழகா இருக்கு, என்னடா இது குஷ்பு எவ்ளோ அழகு என்று அவரது ரசிகர்கள் ஒரே குழப்பத்தில் இருக்கின்றனர் .அனைத்து நடிகர், நடிகைகளும் தனது கிளாமர் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் நடிகை குஷ்புவோ தனது புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் தனது மகளின் புகைப்படங்களை வெளியிட்டு அசத்திகொண்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X