சும்மா சொல்லக்கூடாது.. இந்த வயசுலேயும் என்னா அழகு.. தெறிக்கவிடும் குஷ்புவின் அசத்தல் செல்பிஸ்!

சென்னை: நடிகை குஷ்பு டிவிட்டரில் ஷேர் செய்திருக்கும் செல்பி போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வயசே தெரியவில்லை என வாயை பிளந்துள்ளனர்.

Recommended Video

Khushbu Slapping Question • மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கா? | Pregnant Elephant

நடிகை குஷ்பு 1990களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தார். ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டுள்ளார்.

தற்போதும் படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் கவுரவத் தோற்றங்களில் நடித்து வருகிறார் நடிகை குஷ்பு. சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அடிக்கடி செய்திகள்

அடிக்கடி செய்திகள்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை குஷ்பு அவ்வப்போது அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது அரசியல் ரீதியிலான கருத்துக்கள் காரணமாக அடிக்கடி செய்திகளிலும் அடிபட்டு வருகிறார்.

வில்லாக வளைந்து யோகா

வில்லாக வளைந்து யோகா

மேலும் கணவர் நடத்தும் போட்டோ ஷூட், தானே எடுக்கும் செல்பி என அவ்வப்போது தனது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து அசத்தி வருகிறார். அண்மையில் வீட்டில் மல்லாக்கப் படுத்தப்படி வில்லாக வளைந்து யோகா செய்த போட்டோக்களை ஷேர் செய்தனர்.

மேட்சாக மாஸ்க்

மேட்சாக மாஸ்க்

அதனை பார்த்து நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டி தள்ளினர். தற்போது லாக்டவுன் நேரத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வெளியே செல்லும் நடிகை குஷ்பு டிரெஸுக்கு மேட்சாக மாஸ்க் அணிந்து அந்த போட்டோக்களையும் ஷேர் செய்து உசுப்பேற்றி வருகிறார்.

பச்சை.. நீலம்..

பச்சை.. நீலம்..

இந்நிலையில் அட்டகாசமான சேலைகளில் அசத்தலான செல்பிக்களை எடுத்துள்ளார் குஷ்பு. பச்சை நிற சேலை, பிங்க் நிற ஜாக்கெட் என ஒரு செல்பியும், நீல நிற சேலை பர்ப்பிள் நிற ஜாக்கெட் என மற்றொரு செல்பியும் எடுத்துள்ளார். சேலைக்கு மேட்சாக பொட்டு வைத்துள்ளார்.

வயசே தெரியவில்லை

வயசே தெரியவில்லை

இதில் பச்சை நிற சேலையில் இருக்கும் செல்பியை காட்டிலும் நீல நிற செல்பி டக்கராக உள்ளது. அதில் கொஞ்சம் கூடதல் மேக்கப்புடன் நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அவ்வளவு அழகாக இருக்கிறார் குஷ்பு. அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வயசே தெரியவில்லை என வாயை பிளந்துள்ளனர்.

உங்கள் தங்கையா?

உங்கள் தங்கையா?

சில ஆண் ரசிகர்களே குஷ்புவின் சேலையை வர்ணித்துள்ளனர். இரண்டு சேலைகளும் ரொம்பவே அழகாக உள்ளது. இவை எங்கே கிடைக்கும் என கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள், இது யாரு உங்கள் தங்கையா என கேட்டு ஜொள்ளுவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X