உங்க அம்மா பேரு கூத்தாடியா.. உங்க பெருந்தன்மை பிடிச்சுருக்கு.. நெட்டிசனை உலுக்கி எடுத்த பிரபல நடிகை!
சென்னை: தன்னை கூத்தாடி என்று கூறிய நெட்டிசனை நடிகை குஷ்பு சரமாரியாக உலுக்கியிருக்கிறார்.
நடிகை குஷ்பு, சினிமா, சீரியல், அரசியல் என்று பிஸியாக வலம் வந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். அண்மையில் டிவிட்டர் முழுக்க நெகட்டிவிட்டிதான் அதிகம் உள்ளது என்று கூறி சில நாட்கள் விலகியிருந்தார்.
பின்னர் மீண்டும் டிவிட்டருக்கு வந்த அவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார். வழக்கமாக குஷ்பு என்ன கருத்து கூறினாலும் அதற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர இருக்கும்.
குஷ்பு சாடல்
அந்த வகையில் அண்மையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சாடி டிவிட்டியிருந்தார். அவர்களுக்காக கோபம் வெறுப்புடன் ஒரு இந்தி பாடலை டெடிக்கேட் செய்வதாக டிவிட்டியிருந்தார்.
அம்மா கூத்தாடி தாயே
இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், நடிகை குஷ்புவை கூத்தாடி என்று விமர்சித்திருந்தார். அம்மா கூத்தாடி தாயே மும்பாய் சேரியில் உன் விலாசம் இருக்கிறதே. உன் பிறப்பிடம் அது தானே. அப்புறம் நீ ஏன் பயப்படுகிறாய்? என்று கடுமையாக கேட்டிருந்தார்.
உங்க அம்மா பெயர்
அவரது டிவிட்டுக்கு பதிலளித்த குஷ்பு, உங்க அம்மா கூத்தாடின்னு சொன்னதுக்கு நன்றி.. உங்களோட பெருந்தன்மை பிடிச்சுருக்கு என்று கூறி பதிலடி கொடுத்தார்.
அது இது தானா?
குஷ்புவின் இந்த பதிலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த கோயம்புத்தூர் மருமகள் குசும்பு இருக்கே அது இது தானா என்கிறார் இந்த நெட்டிசன்.

கஸ்தூரியுடன் மோதல்
குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பான நடிகை குஷ்புவின் கருத்துக்கு ஏற்கனவே நடிகை கஸ்தூரி பதில் தெரிவித்திருந்தார். அவரையும் விளாசியிருந்தார் குஷ்பு.

குஷ்புவுக்கு பதிலடி
இதேபோல் நடிகை காயத்ரி ரகுராமிடம் டிவிட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார். காயத்ரி ரகுராமும் குஷ்புவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

கெட்ட வார்த்தை
அண்மையில் தனது மகளின் போட்டோவை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசனை கெட்ட வார்த்தையால் திட்டினார் குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











