அட லூசு பசங்களா.. ஏன்டா முட்டாள்னு புருவ் பண்றீங்க? நெட்டிசன்களை சரமாரியாக விளாசிய நடிகை குஷ்பு!

Recommended Video

Kushboo quits twitter because of negativity

சென்னை: நடிகை குஷ்பு நெட்டிசன்களை சரமாரியாக விளாசியிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பெரியார் குறித்து தான் எதுவும் தெரியாமல் பேசவில்லை என்று கூறி ஆதாரத்தை காண்பித்தார். கூடவே மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் அதிரடியாக கூறினார்.

உலகளவில் ட்ரென்டிங்

உலகளவில் ட்ரென்டிங்

அவரது கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது. மன்னிப்பு கேட்க முடியாது என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரென்டிங்கில் உள்ளது.

ரஜினிக்கு ஆதரவு

ரஜினிக்கு ஆதரவு

இந்நிலையில் நடிகை குஷ்பு நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். சரியோ தவறோ. அது அவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் விருப்பம். ஆனால் ரஜினி சார் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது

மனசு என்ன சொல்கிறதோ..

நமக்கு இப்போது தேவை எல்லாம் நேர்மை மட்டும்தான். பயத்தை வைத்து, ஆட்சி செய்ய முடியாது. பேசுங்கள். உங்கள் மனசு என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

தலைவர் 168

குஷ்புவின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் ரஜினியின் 168வது படத்தில் நடிப்பதால் இப்படி பேசுகிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். பலர் அதனை காரணமாக வைத்து விமர்சித்திருந்தனர்.

அட லூசு பசங்களா..

இந்நிலையில் நடிகை குஷ்பு அவர்களுக்கெல்லாம் நச் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, அட லூசு பசங்க.. ரஜினி சார் கூட ஏற்கனவே நடிச்சு முடிச்சுட்டேன்டா.. எனக்கு இது புதுசு இல்ல.. ஏன்டா முட்டாள்னு புரூவ் பண்றீங்க? என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X