சினிமாவில் என் வண்டி ஓட சின்னத்தம்பி படம் தான் காரணம்.. நடிகை குஷ்பூ நெகிழ்ச்சி!

சென்னை: சின்னதம்பி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஸ்பெஷலான படமாகும். சினிமாவில் இன்று வரை என் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு அந்த படம் தான் காரணம். அந்த படம் இவ்வளவு பெரிய பெயரை எனக்கு பெற்றுத்தரும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று, நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. அன்றைய காலகட்டத்தில் மிக பிரம்மாண்டமான வெற்றிப் படமாக சின்னதம்பி அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடிசாதனை படைத்தது. இளையராஜாவின் இசையில் தூளியிலே ஆட வந்த, போவோமா ஊர்கோலம், நீ எங்கே என் அன்பே பாடல் இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் பாடலாகவே உள்ளது.

Actress khushbu Sundar c talks about chinna thambi movie

குஷ்பு பேட்டி: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை குஷ்பு, சின்னதம்பி எனக்கு பிடித்த ஸ்பெஷலான படம். இன்று வரை சினிமாவில் என் வண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால், அதற்கு காரணம் சின்னதம்பி படம் தான். அந்த படத்தில் நடிக்கும் போது, படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என்று நான் நினைக்கவே இல்லை. மக்கள் எனக்கு கோவில் கட்டி கொண்டாடும் அளவிற்கு கொண்டு சென்றது அந்த படம் தான்.

கிளாமர் அடையாளத்தை மாற்றியது: அந்த படத்திற்கு முதலில் வேறு யாரோ ஒரு நடிகை தான் நடிக்க வேண்டியது. அவர்களின் கால்ஷீட் கிடைக்காததால், அந்த படத்தில் நான் நடித்தேன். பி வாசு சார், நான் நடித்த படத்தை பார்த்துவிட்டு, சின்னதம்பி படத்துக்காக என்னை அணுகிறார். அதற்குள் வருஷம் 16 எல்லாம் நடித்து முடித்து விட்டேன். அப்போது எனக்கு கிளாமர் கேர்ள் என்ற பெயர் இருந்தது. ஆனால் பி.வாசு என்னோட படம் பார்த்து விட்டு சின்னதம்பி படத்தில் வாய்ப்பு கொடுத்தால் நான் நன்றாக நடிப்பேன் என நினைத்தார். அவர் தயாரிப்பாளரிடம் சண்டை போட்டு ஒப்புக்கொள்ள வைத்தேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X