Khushbu sundar: 5 நாட்களில் அரண்மனை 4 படம் ரிலீஸ்.. குஷ்பூ என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?
சென்னை: நடிகர் சுந்தர் சி இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் அரண்மனை 4. இந்தப் படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா சுந்தர் சி.யுடன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் மே மாதம் 3ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள சூழலில் படத்திற்கான ப்ரோமோஷன்களில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் படத்தில் தமன்னாவிற்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் சுந்தர் சி பாராட்டு தெரிவித்து இருந்தார். அவர் அதை சிறப்பாக பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படங்கள் 3 பாகங்களாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த படமும் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

அரண்மனை 4 படம்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அரண்மனை 4. முன்னதாக படம் பொங்கலையொட்டி ஜனவரி மாதத்திலேயே ரிலீசாகவிருந்தது. தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மே 3ம் தேதி அரண்மனை 4 படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருந்த நிலையில் சில காரணங்களால் அது நடக்க முடியாமல் போன சூழலில் சுந்தர் சியே இந்த படத்தில் ஹீரோவாக கமிட்டாகி நடித்துள்ளார்.
இரண்டு நாயகிகள்: படத்தில் இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். ராஷி கண்ணா மற்றும் தமன்னா இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி ஆகியோரும் அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளனர். அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி முதல் இரண்டு பாகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த சூழலில் மூன்றாவது பாகம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் அரண்மனை 4ம் பாகத்தை தற்போது நம்பிக்கையுடன் சுந்தர் சி இயக்கி முடித்துள்ளார்.
ஹிப்ஹாப் ஆதி இசை: இந்தப் படத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தில் சுந்தர் சியின் தங்கையாக தமன்னா நடித்துள்ளார். அவரது மர்ம மரணம் மற்றும் அதற்காக வழக்கறிஞராக சுந்தர் சி நீதி கேட்டு போராடுவதாக இந்தப் படத்தின் கதைக்களம் காணப்பட்டது. முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகத்திலும் பேய், பேய் விரட்ட களமிறங்கும் ஹீரோ மற்றும் கிளைமாக்சில் சாமி பாடல் என அதே விஷயங்கள் அரண்மனை 4 பாகத்திலும் காணப்படுகிறது. இதில் கிளைமேக்ஸ் பாடலில் குஷ்பூ இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
அரண்மனை 4 குறித்து குஷ்பூ ட்வீட்: வழக்கம் போல சுந்தர் சி படங்களில் காமெடி பேயை பார்க்க முடியும். அந்த வகையில் இந்த படமும் அதே கதைக்களத்தில் அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இந்தப் படத்தில் தமன்னா மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் அவரது கேரக்டர் இந்த படத்திற்கு, படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்றும் சுந்தர் சி தொடர்ந்து கூறி வருகிறார். மே 3ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள சூழலில் முதல் இரண்டு பாகங்களை போல இந்த பாகமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். படம் ரிலீசாக இன்னும் ஐந்து தினங்களே உள்ள சூழலில் நடிகை குஷ்பு, படம் குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள அவர் மயிர் கூச்செறியும் திரை அனுபவத்தை பெற தயாராகுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











