சின்னத்தம்பி 2 படத்தை பி. வாசு இயக்கலாம்னு ட்வீட் போட்ட ரசிகர்.. குஷ்புவோட ரியாக்ஷனை பாருங்க?
சென்னை: ஒரு பக்கம் நடிகர் பிரபுவும் மறுபக்கம் நடிகை குஷ்புவும் உடல் எடையை குறைத்து சூப்பர் ஸ்லிம்மாக மாறி உள்ள நிலையில், இயக்குநர் பி. வாசு சின்னத்தம்பி படத்தை இயக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர் ஒருவர் இப்படி போட்டுள்ள ட்வீட்டுக்கு நடிகை குஷ்பு போட்டுள்ள ரிப்ளை தான் இணையத்தில் இப்போ ஹாட் டாப்பிக் ஆகி உள்ளது.
இருவரும் மீண்டும் திரையில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

18 வயது பெண் போல
18 வயது பெண் அணியும் ஜீன்ஸ் உடை உங்களுக்கு ஃபிட்டானால் எப்படி சந்தோஷப்படுவீங்க அப்படியொரு சந்தோஷத்தில் இருக்கிறேன் என நடிகை குஷ்பு சமீபத்தில் கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கலக்கலாக போட்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

மீண்டும் கனவுக்கன்னி
சினிமாவில் எப்படி என்ட்ரி ஆனாரோ அதே போல இத்தனை ஆண்டுகள் கழித்தும் உடல் எடையை வெகுவாக குறைத்து சூப்பர் ஸ்லிம் ஆக மாறியுள்ள நடிகை குஷ்பு மீண்டும் கனவுக்கன்னியாக மாறி உள்ளார் என ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் வர்ணித்து வருகின்றனர்.

மறுபக்கம் பிரபு
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரபுவும் கடின உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். மகன் விக்ரம் பிரபுவுக்கே போட்டியாக மாறிவிடும் அளவுக்கு பிரபு மாறியுள்ளதை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சந்திரமுகி 2வுக்கு முன்
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. பி. வாசு இயக்க இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்த படத்திற்கு முன்பாக குஷ்புவையும் பிரபுவையும் வைத்து ஒரு படத்தை பி. வாசு இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

சின்னத்தம்பி 2
நெட்டிசன் ஒருவர் நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்புவின் உடல் எடை குறைந்த புகைப்படங்களை ஷேர் செய்து, இயக்குநர் பி. வாசு சந்திரமுகி 2 படத்தை எடுப்பதற்கு முன்பாக சின்னத்தம்பி 2 படத்தை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்க அதற்கு நடிகை குஷ்பு ரியாக்ஷன் போட்டுள்ளார்.

குஷ்புவுக்கு ஓகே
1991ம் ஆண்டு இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் பிரபு மற்றும் குஷ்பு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், ரசிகரின் இந்த ட்வீட்டை பார்த்த குஷ்பு, அவரது கருத்துக்கு சம்மதம் தெரிவிப்பது போல வணக்கம் மற்றும் தம்ஸ் அப் எமோஜிகளை வெளியிட்டு இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 90களில் சினிமா உலகை கலக்கிய இந்த சூப்பர் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்குமா? என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











