Khushbu Sundar: குஷ்பூ வெளியிட்ட மகளின் படம்.. விரைவில் நாயகியாகும் அவந்திகா!

சென்னை: நடிகை குஷ்பூ, 90களின் சிறப்பான நாயகியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

தொடர்ந்து இவர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

தயாரிப்பாளர், ரியாலிட்டி ஷோ நடுவர், நடிகை, சின்னத்திரை சீரியல் நடிகை என பன்முகம் காட்டி வரும் குஷ்பூ, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Actress Khushbu sundar shared her daughter Avanthikas cute photoshoot pictures in Social media

மகளின் க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட குஷ்பூ: நடிகை குஷ்பூ தயாரிப்பாளர், நடிகை, சின்னத்திரை நடிகை, ரியாலிட்டி ஷோ நடுவர் என பன்முகம் காட்டி வருகிறார். இதனிடையே அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது அடுத்தடுத்த பிசியான ஷெட்யூலிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய பிட்னஸ் உள்ளிட்டவற்றிலும் கவனத்துடன் செயல்படுகிறார். குண்டாக காணப்பட்ட குஷ்பூ, தற்போது சிறப்பான டயட் மற்றும் வொர்க் அவுட்களால் ஸ்லிம்மாகியுள்ளார்.

தன்னுடைய உடலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றார். கடந்த 90களில் மிகவும் பிசியாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் குஷ்பூ. இவருக்கு கோயில் கட்டியும் புசுபுசு இட்லிக்கு குஷ்பூ இட்லி என்று பெயர் வைத்தும் மகிழ்ந்தனர் ரசிகர்கள். அந்த அளவிற்கு தன்னுடைய துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டார் குஷ்பூ.

தொடர்ந்து ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த குஷ்பூ, ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தை இயக்கிய இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வளர்ந்து பெரியவர்களாகியுள்ள நிலையில், இவர்களில் ஒருவர் நடிப்பிலும் மற்றவர் தயாரிப்பிலும் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Actress Khushbu sundar shared her daughter Avanthikas cute photoshoot pictures in Social media

இதில் அவந்திகா சுந்தர், நடிப்பில் கவனம் செலுத்தவுள்ள நிலையில், அவர் அடுத்தடுத்த போஸ்ட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து இவரது க்யூட் புகைப்படங்களால் ரசிகர்கள் அதிகமாக கவரப்பட்டு வருகின்றனர். நடிகை குஷ்பூவும் இவரது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். தன்னுடைய இளவரசி என்று அவர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார். மிகவும் குண்டாக காணப்பட்ட அவந்திகா, தற்போது மிகவும் ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார்.

இவர் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ள நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்களை அவந்திகாவும் குஷ்பூவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இதில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கிட்டில் அழகான புடவையில் காணப்படுகிறார் அவந்திகா. தமிழ் சினிமாவிற்கு அழகான ஹீரோயின் தயாராகியுள்ளதாக தற்போது ரசிகர்கள் இவரது புகைப்படத்தை பார்த்துவிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X