Don't Miss!
- News
நடிகர் ரஜினியின் போட்டோ, பெயரை பயன்படுத்த தடை.. மீறினால் குற்ற நடவடிக்கை.. அறிவிப்பின் பரபர பின்னணி
- Finance
வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.. ஜனவரி 30 -31 வங்கி சேவைகள் பாதிக்காது..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
20 வயது ஹீரோயின் போல மின்னும் உடையில் குஷ்பு.. இந்த லுக்குக்காக அவர் செய்தது என்ன!
சென்னை : எப்போதும் கொழு கொழுவென இருக்கும் நடிகை குஷ்பு, கடுமையாக உடற்பயிற்சி செய்து கடந்த சில தினங்களாக மெலிவான தோற்றத்தில் காணப்படுகிறார்.
Recommended Video
இந்த தோற்றத்தில் குஷ்பு வயது குறித்து, அழகாக காணப்பட்டாலும், கொழு கொழு குஷ்புவை பார்க்கமுடியாமல் ரசிகர்கள் கவடைந்து வருகின்றனர்.
தற்போது ஜொலிக்கும் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பிரதாப் போத்தனின் கடைசி படம் காபி வித் காதல்.. நல்ல நண்பரை இழந்து விட்டேன் என குஷ்பு உருக்கம்!

நடிகை குஷ்பு
கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பிசியாக இருந்த குஷ்பு, மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சினிமாவை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையிலும் ரீஎன்ட்ரி கொடுத்தார் குஷ்பு. நடிகை, தயாரிப்பாளர் என்பதை தாண்டி தற்போது எழுத்தாளராகவும் மாறியுள்ளார் குஷ்பு.

முன்னணநி நடிகருடன் ஜோடி
நடிகை குஷ்பூ போல சிறப்பான மற்றும் அதிகமான ரசிகர்களை பெற்றவர்கள் யாரும் இருக்க முடியாது. 90 காலகட்டத்தில் கமல், ரஜினி, சத்யராஜ், விஜய்காந்த், சரத்குமார் என இவர் ஜோடி போடாத முன்னணி நடிகரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து நடிகருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

திருமணம்
ஒரு கட்டத்தில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்நாட்டு மருமகளாக மாறினார் குஷ்பூ. இவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒருவர் தற்போது நடிப்புக்கான படிப்பை வெளிநாட்டில் படித்துவிட்டு நடிகையாக தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த தகவலை குஷ்பூ வெளியிட்டிருந்தார்.

பேமஸான குஷ்பு
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக நடிகை ஒருவருக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவுக்கு தான். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பாப்புலராக இருந்தார் குஷ்பு. அதேபோல் தமிழ்நாட்டில் இன்றளவும் குஷ்பு இட்லி பேமஸாக உள்ளது. புசு புசுனு இருந்த குஷ்பு சமீபகாலமாக உடல்வாகை குறைத்து தற்போது ஸ்லிம் அழகியாக மாறி இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

ஜொலிக்கும் உடையில்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு தற்போது ஜொலிக்கும் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள அவர் வரும்போது கொஞ்சம் பூசினாற்போல் இருப்பார், சில நேரம் பழைய குஷ்பு போல குண்டாக தெரிகிறார். சில நாள் கழித்து மீண்டும் ஒல்லியான தோற்றுகிறார் இதனால் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கடுமையான உடற்பயிற்சி
ஆனால் குஷ்பு ஆரோக்கியமான உணவு மற்றும் ஒர்க் அவுட் மூலம் தனது உடல் எடை இழப்பு பயணத்தை இவர் மிகவும் பொறுப்புடன் மேற்கொண்டு கிட்டத்தட்ட 14 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பல ரசிகர்கள் ஒட்டிய முகத்துடன் இருக்கும் குஷ்பு எங்களுக்கு வேண்டாம் கொழு கொழு குஷ்புதான் வேண்டுமென ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.