என் சிறந்த மருந்து.. என் சிறந்த பாதி.. கணவருடன் காதல் சொட்ட சொட்ட போட்டோ.. அசத்தும் குஷ்பு!

சென்னை: நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர் சியுடன் எடுத்துள்ள அசத்தல் போட்டோ வைரலாகி வருகிறது.

மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகை குஷ்பு, இந்தி படங்களின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்த அவர், தமிழில் முன்னணி நடிகையாக உச்சம் தொட்டார்.

80, 90களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்த குஷ்பு, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பலருடனும் ஜோடியாக நடித்துள்ளர்.

மறப்பதில்லை

மறப்பதில்லை

பின்னர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக்கொண்டு தமிழ் நாட்டிலேயே செட்டிலான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார். இப்போதும் டிவி, சீரியல், சினிமா என படு பிஸியாக உள்ளார் குஷ்பு. ஆனாலும் கணவர் மகள்கள் என குடும்பத்தினருடனும் நேரத்தை செலவழிக்க மறப்பதில்லை.

கணவருடன் காதல்

கணவருடன் காதல்

தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் குஷ்பு, சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வரும் குஷ்பு, தனது கணவர் மீதான காதலையும் அடிக்கடி சமூக வலைதளம் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

லாக்டவுன் நேரத்தில் பொழுதை போக்க முடியாமல் தவிக்கும் நடிகை குஷ்பு கணவரின் கை வண்ணத்தில் கலக்கல் போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி திணறடித்து வருகிறார். மேலும் செல்பிக்களையும் ஷேர் செய்து கிறங்க செய்கிறார்.

அப்படியே இருக்கீங்களே

அப்படியே இருக்கீங்களே

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை வாவ்.. என வாயை பிளக்க செய்தார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், வயசே ஆகல, இன்னும் அப்படியே இருக்கீங்களே என ஜொள்ளு விட்டனர்.

Recommended Video

Kushboo Emotional Note |Bihar Migrant Women • Muzaffarpur Railway Station
கணவர் மீது சாய்ந்து

கணவர் மீது சாய்ந்து

இந்நிலையில் தற்போது தனது கணவரான இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சியுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த செல்பியை இயக்குநர் சுந்தர் சி எடுத்ததாக தெரிகிறது. இதில் சுந்தர் சியும் சிரிக்க அவர் மீது சாய்ந்தப்படி குஷ்புவும் சிரிக்கிறார்.

என் சிறந்த பாதி

என் சிறந்த பாதி

இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள குஷ்பு, காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை என்றும் என் சிறந்த மருந்து, என் சிறந்த பாதி என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் காதல் சின்னமான ஹார்ட்டின் சிம்பளையும் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.

அருமையான ஜோடி

அருமையான ஜோடி

அதனை பார்த்த நெட்டிசன்கள், பியூட்டிஃபுல்.. உங்கள் இருவருக்கும் கடவுளின் ஆசிர்வாதம், திருஷ்டி பட்டுவிடப் போகிறது டச் வுட்.. டச் கோல்டு என டிவிட்டியுள்ளனர். அருமையான ஜோடி.. கடவுளின் ஆசிர்வாதங்கள் என்றும் டிவிட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X