வாவ்.. தலைவர் 168ல் ரஜினிக்கு வில்லியாகும் பிரபல நடிகை.. இப்டி ஒரு டிவிஸ்டை எதிர்பார்க்கலைல?
ரஜினியின் தலைவர் 168 படத்தில் நடிகை குஷ்பு இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: ரஜினியின் தலைவர் 168 படத்தில் நடிகை குஷ்பு இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்க உள்ள படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு தலைவர் 168 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடித்த எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்துள்ளார்.

தலைவர் 168 படத்தின் கதாநாயகிகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஏற்கனவே கமிட்டாகியுள்ளனர். காமெடியனாக சூரி நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை குஷ்பு இணைய உள்ளது தெரியவந்துள்ளது. தர்மத்தின் தலைவன், மன்னன், பாண்டியன், அண்ணாமலை ஆகிய படங்களில் ரஜினியுடன் குஷ்பு ஏற்கனவே நடித்துள்ளார்.
இப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை ரஜினிக்கு வில்லியாக குஷ்பு நடிக்கிறாரா என கோடம்பாக்கத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











