உங்களைப் பார்த்தா அப்படி ஒன்னும் டேஞ்சரா தெரியலையே..? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தன்னை ஆபத்தானவள் என்றார்கள் எனத் தெரிவித்திருக்கும் நடிகையை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி. இவர் இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.
குமார் ஆதர்ஷ் இயக்கிய ஶ்ரீன்கார் (Shringaar) படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதில் குமார் ஆதர்ஷ், சாஹில் கான் உட்பட பலர் நடித்திருந்தனர்.

லாக்டவுன்
இதையடுத்து பல்வீர் ரிட்டர்ஸ் உட்பட சில படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள இவர், பிரபல மாடலும் கூட. கொரோனாவுக்காக கடந்த 3 மாதங்களாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால், நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்கள் பொழுதுகளை கழித்து வருகின்றனர். வீட்டில் செய்யும் சமையல், யோகா, கார்டனிங், டான்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

லட்சத்தில் லைக்ஸ்
இதை சில நடிகைகள் தினம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்வது வாடிக்கை. அவர்களிடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கென்றே ஏராளமானவர்கள் அவர்களைப் பின் தொடர்கின்றனர். இதற்காக சில நடிகைகள் கிளாமர் ஸ்டில்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதற்கு லட்சக்கணக்கான லைக்ஸ்களும் ஆயிரக்கணக்கான கமென்ட்களும் கிடைப்பது நிச்சயம் என்பதால், நடிகைகள் குஷியாகி ஆகின்றனர்.

நடிகை குஷி முகர்ஜி
அதில் வரும் பெரும்பாலான கமென்ட்கள் அவர்களை புகழ்ந்தே இருப்பதால், அதை விரும்புகின்றனர். சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார், நடிகை குஷி முகர்ஜி. இவரது ஹாட் புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் செம கிளாமராக இருக்கிறது.

நான் ஆபத்தானவள்
அதற்கு ரசிகர்கள் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை குவித்துள்ளனர். பலர் ஜாலியான கமென்ட்களையும் பதிவு செய்துள்ளனர். இதற்காக பதிவிட்டுள்ள கேப்ஷனில், ஒரு குட்டிக் கதைச் சொல்லி இருக்கிறார். அதில், 'நான் ஆபத்தானவள் என்று கூறப்பட்டது. ஏன் என்று கேட்டேன். ஏனென்றால், நீ யாரையும் சார்ந்து இல்லை' என்று அவர்களிடம் பதில் வந்தது என்று கூறியுள்ளார்.

டிரெஸ் அருமை
இந்த கதை நல்லாருக்கு என்று கூறியுள்ள சிலர், அதை வைத்து கண்டபடி கலாய்த்துள்ளனர். உங்க டிரெஸ் அருமையா இருக்கு என்று ஒரு சிலர் கூறியுள்ளனர். நீங்க இன்னும் டேஞ்சராவா இருக்கீங்க? பார்த்தா, அப்படி தெரியலையே என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இன்ஸ்டா லைவ்ல எப்ப வருவீங்க? என்று சிலர் கேட்க, இப்பலாம் வெப்சீரிஸ்ல பார்க்க முடியலையே என்று கேட்டிருக்கிறார், மற்றொருவர். பலர் அவர் அழகை புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











