இது கிளாமருக்கும் மேல! யாருமே பாக்காத ஃபோட்டோஸ்! ரசிகர்களை கவரும் கிம் கதர்ஷியன்!
நியூயார்க்: முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட் திருமணம் கடந்த 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் செண்டரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து உள்ளூரில் உள்ள பிரபலங்கள் வரை பலர் கலந்து கொண்டனர். இதில் பலரது கவனத்தையும் தனது கவர்ச்சியான உடையால் ஈர்த்தவர் அமெரிக்க நடிகையும் தொலைக்காட்சி பிரபலமுமான கிம் கதர்ஷியன்ஸ் தான்.
இவர் திருமணத்திற்கு முன்தினம் இரவே அனைவரைப் போலவும் திருமணக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் சிவப்பு நிற உடை அணிந்திருந்தார். அந்த உடையில் அவர் மிகவும் கவர்ச்சியாக காணப்பட்டதால் அவர் நடந்து வந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் கடந்த சில தினங்களாக ட்ரெண்டிங்கில் இருந்தது. குறிப்பாக பலர் யாருங்க இந்தம்மாவுக்கு ஜாக்ஜெட் தைத்தார்கள் என மோசமாகவும் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் தனது இந்திய பயணம் தொடர்பாகவும், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட் ஆகியோரது திருமணத்தில் தனது சகோதரியுடன் கலந்து கொண்டது தொடர்பாகவும், திருமணத்திற்காக அவர் தயாரானது, திருமணத்தின்போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வரை தனது எக்ஸ் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் இதற்கு முன்னர் ரிலீஸ் ஆகாத புகைப்படங்கள் என்பதால் ரசிகர்கள் தீவிரமாக இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் செய்து வருகின்றனர். மேலும் தனது இந்திய பயணம் குறித்து கிம் கதர்ஷியன்ஸ் மிகவும் மகிழ்ச்சியாக பதிவுட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் வெள்ளை நிற உடையில் அவர் தேவதையைப் போல் உள்ளார். மேலும் அவர் நெற்றியில் வைத்துள்ள பொட்டுடன் கூந்தலை அவிழ்த்து விட்டுள்ள அவரைப் பார்க்கும்போது தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையைப் போல் உள்ளார்.

மேலும், மற்றொரு புகைப்படத்தில் மஞ்சளும் குங்குமமும் கையில் ஏந்தியபடி உள்ளார். இதனை டாப் ஆங்கிளில் இருந்து புகைப்படம் எடுத்திருப்பதால் அவர் கையில் அணிந்துள்ள கடல் சங்கில் செய்த வளையல்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றன. மற்றொரு புகைப்படத்தில் மலர் மாலை ஒற்றை விரலில் வைத்துக்கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் அழகாக காணப்படுகின்றார். இவை மட்டும் இல்லாமல் இந்த நிகழ்வுக்காக இந்தியா வந்ததில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகின்றார்.
ஜோ - சூர்யா: தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் மட்டும் இல்லாமல், இயக்குநர் அட்லி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல், நயன் - விக்கி தம்பதியர், ஜோ - சூர்யா தம்பதியரும் கலந்து கொண்டனர். இதில் ஜவான் படத்தில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்துள்ள அட்லீ, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட் ஆகியோர் திருமண கொண்டாட்டத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து நடைபெறும் இந்த திருமணக் கொண்டாட்டத்தில் அட்லீ தனது மனைவியுடன் அட்டன்டன்ஸ் போட்டுக்கொண்டே உள்ளார்.

10 நிமிட அனிமேசன் படம்: இந்நிலையில் திருமணத்தின் இரண்டாவது நாளில் அட்லி இயக்கி, அமிதாப் பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்த 10 நிமிட அனிமேஷன் படம் விருந்தினர்களுக்காக பிரத்யேகமாக ஒளிபரப்பட்டுள்ளது. இந்த வீடியோ உருவாக்கத்திற்காக அட்லீ ஒரு படத்தினை இயக்க எவ்வளவு சம்பளமாக பெறுகின்றாரோ அதே சம்பளத்தை அம்பானி தரப்பில் இருந்து வழங்கியதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











