பிகினியில் அதைத்தான் பண்ணுவாங்க... இதைத்கூடவா பண்ணுவாங்க.. தீயாய் பரவும் நடிகையின் போட்டோ!
சென்னை: பிரபல கவர்ச்சி நடிகை பிகினியில் வொர்க் அவுட் செய்யும் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
அமெரிக்க மாடல், நடிகை என பல முகங்களை கொண்டவர் கிம் கர்தஷியன். சில படங்களில் நடித்துள்ள கிம் கர்தஷியன் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் கிம். இதுவரை மூன்று திருமணங்களை செய்துள்ளார் கிம் கர்தஷியன்.

டைம் மேகஸின்
முதல் இரண்டு கணவர்கள் விவாகரத்து செய்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு மூன்றாவது திருமணம் செய்தார் கிம் கர்தஷியன். 2015ஆம் ஆண்டு டைம் மேகஸின் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பேரின் பட்டியலில் இடம் பிடித்தார் கிம்.

ஜிம்மில் வொர்க் அவுட்
4 குழந்தைகளுக்கு தாயான கிம் கர்தஷியன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

பிகினியில் வொர்க் அவுட்
அதில் பிகினியில் வொர்க் அவுட் செய்துள்ளார் கிம். கிம்மின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிம்மின் இந்த வொர்க் அவுட் போட்டோவை லைக் செய்துள்ளனர்.

6 ஆண்டுகள் போய்விட்டது
அண்மையில் தான் கிம் கர்தஷியனும் அவரது கணவர் கென்ய வெஸ்ட்டும் தங்களின் ஆறாவது திருமண நாளை கொண்டாடினர். அப்போது தனது கணவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த கிம், 6 ஆண்டுகள் போய்விட்டது, இன்னும் போக வேண்டும்.. இறுதி வரை என கேப்ஷன் கொடுத்தார்.

ஸும் செய்யுங்கள்
கிம்மின் அந்த போட்டோக்கள் வைரலான நிலையில் தற்போது இந்த புதிய பிகினியில் வொர்க் அவுட் செய்யும் போட்டோவும் வைரலாகி வருகிறது. இதேபோல் பிகினியில் வீட்டுக்குள் இருக்கும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் கிம். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஸும் செய்து காட்டுங்கள் என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











