Bigg Boss Kiran evicted: ஒரே வாரத்துல வெளியே அனுப்பிட்டாங்களே.. பிக் பாஸ் தமிழ் 7க்கு வராரா கிரண்?
சென்னை: பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை கிரண் முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்டு இருப்பது தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகை கிரண் இன்ஸ்டாகிராமில் 3.5 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள இவருக்கு ரசிகர்கள் ஓட்டு போடவில்லையா என்கிற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் பவர்ஃபுல் போட்டியாளராக கிரண் இருப்பார் என்று பார்த்தால் ஜிபி முத்துவை விட மோசமா இருக்காரே என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
எவிக்ட்டான கிரண்: சன் டே ஃபன் டே என பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனை தொகுத்து வழங்கி வரும் நாகார்ஜுனா நேற்று இரவு எபிசோடில் நடிகை கிரணை எவிக்ட் செய்தது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கிரண் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டாரே என தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் எல்லாம் வருத்தம் தெரிவித்து விஜய் டிவியை திட்டி வந்த நிலையில், தற்போது ஒரே வாரத்தில் வாம்மா மின்னல் கணக்கா வெளியேறிட்டாரே கிரண் என பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
தப்பித்த பிரின்ஸ் யாவர்: நடிகை கிரண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெருசா எந்தவொரு பர்ஃபார்மன்ஸும் செய்யாத நிலையில், தெலுங்கு ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போடவில்லை என்றும் பிரின்ஸ் யாவர் மற்றும் கிரண் கடைசியாக எவிக்ஷனின் விளிம்பில் இருந்த நிலையில், பிரின்ஸ் யாவர் தப்பித்து விட்டு கிரண் எவிக்ட் ஆகி விட்டார் என்றும் கூறுகின்றனர்.
முதல் வாரத்திலேயே அதிரடியாக நடிகை கிரணை வெளியேற்றிய நிலையில், கிரண் கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டார் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
தமிழ் பிக் பாஸுக்கு வருவாரா: கிரண் அதிரடியாக முதல் வாரத்திலேயே வெளியேற காரணமே தெலுங்கு பிக் பாஸை விட தமிழில் தான் அவருக்கு ரசிகர்கள் அதிகம் என்றும் ஒரு வார காண்ட்ராக்ட் உடன் தான் கிரண் உள்ளே சென்றிருப்பார் என்றும் கண்டிப்பாக பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக வர வாய்ப்புகள் அதிகம் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், கிரண் வரவே தேவையில்லை அவருக்கு பிகினி தான் செட்டாகும் பிக் பாஸ் எல்லாம் செட்டாகாது என்றும் ட்ரோல்கள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











