‘பாபா‘வில் நான் நடிக்க வேண்டியது… நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்… வேதனைபட்ட பிரபல நடிகை!
சென்னை : 2002ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண்.
முதல் படத்திலேயே தமிழ் நடிகர்களின் மனங்களை கவர்ந்தார்.

நல்ல பெயர்
பிரஷாந்துடன் வின்னர் படத்தில் பிரஷாந்துக்கு இணையாக நடித்தார். இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசனுடனும், வில்லன், பரசுராம், வாடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

குத்தாட்டம்
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். பட வாய்ப்பு இல்லாததால், ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து நடனம் ஆடினார். இவர், விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா படத்தில் குத்தாட்டம் போட்டார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.

வேதனைபட்ட நடிகை
இந்நிலையில், நடிகை கிரண் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக கூறியுள்ளார். பாபா படத்தில் மனிஷா கொய்ராலாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், நான் அப்போது தான் ஜெமினி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தேன். இதனால், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video

ஏராளமான ரசிகர்கள்
நடிகை கிரண் தற்போது பேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார், இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை வசியம் செய்து விட்டார்.


Click it and Unblock the Notifications











