90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமில்ல.. இப்போ 2கே கிட்ஸுக்கும் கிரண் கனவு கன்னியா ஆகிடுவாங்க போலயே!
சென்னை: தனது வீட்டில் உள்ள Pugs உடன் நடிகை கிரண் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
சியான் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கிரண் தற்போது, சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக மாறி உள்ளார்.
இந்த கொரோனா லாக் டவுனில் வறண்ட பாலை வனமாக இருக்கும் இளைஞர்கள் நெஞ்சுக்கு, ஜில் என்ற ஜிகிர்தண்டாவாக அப்பப்போ ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு சில் பண்ணி வருகிறார்.
லைஃப் லைன்ஸ்
39 வயதாகும் நடிகை கிரண் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். தனது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளான Pug வகை நாய்க்குட்டிகளுடன் இந்த குவாரண்டின் நேரத்தை செலவிட்டு வருகிறார். Pug உடன் விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகை கிரண், அந்த Pug நாய்க்குட்டிகள் தான் தனது Lifelines என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மினி டிரெஸ்
தனது செல்லப்பிராணிகளுடன் வீட்டில் கொஞ்சி விளையாடும் போட்டோக்களை நடிகை கிரண் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இந்த வயதிலும் செம ஹாட்டாக மினி டிரெஸ் அணிந்துக் கொண்டு கிரண் கொடுத்திருக்கும் போஸ்கள் தான் அந்த புகைப்படங்கள் வைரலாக காரணம். மேலும், கமெண்ட் செக்ஷனில் நடிகை கிரணின் அழகை வர்ணித்து பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கல்யாணம் பண்ணிக்க ரெடி
சியான் விக்ரமின் ஜெமினி, தல அஜித்தின் வில்லன், உலக நாயகன் கமல்ஹாசனின் அன்பே சிவம், எஸ்.ஜே. சூர்யாவின் நியூ என பல படங்களில் நடித்துள்ள நடிகை கிரண், சமீபத்தில் வெளியான விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த வயதிலும் இப்படியொரு இளமையுடன் இருக்கும் நடிகை கிரணை க்ல்யாணம் பண்ணிக்க ரெடி என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.
கனவுக் கன்னி
திவான், தென்னவன், பரசுராம் என பல தமிழ் படங்களில் நடித்துள்ள கிரண் சல்மான் கானின் சாவான், மோகன் லால் உடன் தாண்டவம் என தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை கிரண், தனது ஹாட் போட்டோக்களை தொடர்ந்து பகிர்ந்து 2கே கிட்ஸ்களின் ட்ரீம் கேர்ளாகவும் மாறியுள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்து
கொரோனா நிவாரண நிதிக்காக தல அஜித் 1.25 கோடி நிதி அளித்த செய்தி அறிந்த நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 17ம் தேதி சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, ஜெமினி படத்தில் ஈவ்னிங் கிளாஸ் காட்சியின் போது எடுக்கப்பட்ட ஹெச்.டி புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் விக்ரமுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











