Actress Kiran: இது எங்க போய் முடியுமோ... ஓவர் கவர்ச்சியில் ஆட்டம் போடும் கிரண்!
சென்னை: கொழுக் மொழு நடிகையான கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுக்கும் அலப்பறைப் பார்த்து இளசுகள் மிரண்டு போனார்கள்.
பட வாய்ப்பு இல்லாததால் அம்மணி கவர்ச்சி ரூட்டுக்கு மாறி சோஷியல் மீடியாவை ரணகளப்படுத்தி வருகிறார்.

இவர் பதிவிடும் போட்டோ மற்றும் வீடியோ ஓவர் கவர்ச்சியாக இருப்பதால் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதால் இணையவாசிகள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால், அதைப்பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை
நடிகை கிரண்: ஏ.வி.எம். ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் சீயான் விக்ரமின் ஜெமினி. அந்த படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் கிரண். கொழுக் மொழுக் என்று இருந்த கிரணை தமிழ் ரசிகர்களுக்கு பயங்கரமாக பிடித்துவிட்டது. இதையடுத்து அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், பிரசாந்தின் வின்னர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தனி ஆஃப்: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்த கிரண், தற்போது வயதாகிவிட்டதால் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். இதனால், செயலி ஒன்றை தொடங்கி, அதில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க, தன்னுடன் வீடியோ காலில் பேச, தன்னுடன் டின்னர் டேட்டிங் செய்ய என ஒவ்வொன்றிற்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்து நூதன முறையில் சம்பாதித்து வருகிறார். இதன்மூலம் அவருக்கு லட்சக்கணக்கில் வருமானமும் குவிந்து வருகிறது கிடைக்கிறதாம்.
மோசடி: இதில் மோசடி நடப்பதாகவும் சிலர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். இப்படி சர்ச்சைக்குரிய நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் கிரண், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதெல்லாம் தேவையா: எப்போதும் பிகினி போன்ற கவர்ச்சி உடையில் போட்டோக்களை பதிவிடும் கிரண், ஒருமுறை அரை நிர்வாண கோலத்தில் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக எடிட் செய்து பதிவிட்டு இன்ஸ்டாகிராமையை அலறவிட்டார். தற்போது இவர் குட்டி உடையில் தனது மொத்த உடம்பையும் காட்டி கூவி கூவி ஆட்டம் போட்டுள்ளார். இந்த வயதில் இதெல்லாம் தேவையா, ஓவர் கவர்ச்சி என ரசிகர்கள் கண்டபடி திட்டினாலும் அதைப்பற்றி துளியும் கவலைப்படமாமல் பணம் சம்பாதிப்பதிலே குறியாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











