கிளாசிக் சீனை ஷேர் செய்து.. ஹாலிவுட் ஹீரோயினுடன் ஒப்பிட்ட நடிகை கிரண்.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கிரண் பிரபல ஹாலிவுட் ஹீரோயினுடன் தன்னை ஒப்பிட்டு ஷேர் செய்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.
நடிகை கிரண் ரத்தோர் ஜெமினி படத்தின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடித்து தனக்கு என ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த கிரண், தற்போது ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

ஹோலி போட்டோ
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள கிரண் தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து சூடேற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் ஹோலி கொண்டாடிய போட்டோவை த்ரோ பேக் செய்து திணறடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில்
தொடர்ந்து அரைகுறை உடையில் உசுப்பேற்றி வரும் கிரண், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் தான் தன்னுடைய வீட்டிலே மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார் கிரண்.

புகைப்பிடிக்கும் காட்சி
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ட்ரென்டிங்கில் உள்ள ஃபேஸ் ஆப்பை குறிப்பிட்டு ஹாலிவுட் படத்தின் கிளாசிக் சீன் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது 2000 ஆம் ஆண்டில் வெளியான மலினா படத்தில் நடிகை மோனிகா பெலுசி புகைப் பிடிக்கும் காட்சிதான் அது.

வாயில் சிகரெட்
மோனிகா சிகரெட்டை வாயில் வைத்ததும் சுற்றியிருக்கும் ஆண்கள் லைட்டரை பற்ற வைத்து அவரது சிகரெட்டை பற்ற வைக்க முன் வருவார்கள். அப்போது எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருப்பார் மோனிகா பெலுச்சி. மலினா படத்தில் இடம்பெற்ற இந்தக் காட்சி பெரும் ஹிட்டானது.
View this post on InstagramA post shared by Keira Rathore (@kiran_rathore_official) on
செம க்யூட் கிரண்
இந்தக் காட்சியைதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீஃபேஸ் ஆப் மோடை பயன்படுத்தி பகிர்ந்துள்ளார் கிரண். மேலும் லைட்டர் ப்ளீஸ் என்று கேட்டும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதில் அடையாளமே தெரியாமல் க்யூட்டாக உள்ளார் கிரண்.

டிஸ்லைக் ஆப்ஷன் இல்லை
இதனை பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்ற கிளாசிக் சீனை கேவலப்படுத்தாதீர்கள் என சாடியுள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஸ்லைக் ஆப்ஷன் இல்லை என்றும் கேட்டுள்ளனர்.
Recommended Video

இந்தியாவின் மோனிகா
அதேநேரத்தில், பலர் அந்த நடிகையை விட நீங்கள் ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள் என்றும் பொம்மை போன்று இருக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் நீங்கள் இந்தியாவின் மோனிகா பெலுச்சி என்றும் ஜொள்ளுவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











