அச்சச்சோ.. 3 நாள்தான் இருக்கு இப்படி சொல்லிட்டாங்களே.. வைரலாகும் பிரபல நடிகையின் பிக்பாஸ் ரிப்ளை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த நடிகை கிரணின் ரிப்ளையை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.

நடிகை கிரண், பிரபல பாலவுட் நடிகையான ரவீனா டான்டனின் கஸின் ஆவார். விக்ரமுடன் ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து, அஜித், விஜய், கமல் என பலருடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டும் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கிரண்.

ஆன்ட்டி கதாப்பாத்திரங்கள்

ஆன்ட்டி கதாப்பாத்திரங்கள்

அதோடு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மற்ற மொழி படங்களிலும் பிஸியாக உள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது செகன்ட் ரவுண்ட் வரும் கிரணுக்கு, ஆன்ட்டி கதாப்பாத்திரங்களே கொடுக்கப்படுகிறது.

பிக்பாஸில் கிரண்?

பிக்பாஸில் கிரண்?

இருந்த போதும் தான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன் என்பதை கூறும் வகையில் சமூக வலைதளங்களில் செம கிளாமர் காட்டி வருகிறார். இதனிடையே விஜய்
டிவியில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக கடந்த சில மாதங்களாக பேச்சு அடிப்பட்டு வந்தது.

கிரணுக்கு ஆர்மி

கிரணுக்கு ஆர்மி

நடிகர் கமல்ஹாசனின் வேண்டுகோளுக்கு இணங்கதான் கிரண் உள்ளே வர போகிறார் என்று பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் அவருக்கு ஆர்மியையும் தொடங்கினர். பிக்பாஸ் வீட்டில் உங்களை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறோம் என்றும் ரசிகர்கள் டிவிட்டி வந்தனர்.

வருவது நிச்சயம்

வருவது நிச்சயம்

உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட் என்று வெளியான பட்டியலிலும் நடிகை கிரணின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது நிச்சயம் என குஷியில் இருந்தனர் ரசிகர்கள்.

கிரண் ரிப்ளை

கிரண் ரிப்ளை

இந்நிலையில் ரசிகர் ஒருவர் வெல்கம் டூ பிக்பாஸ் ஹவுஸ் என கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை கிரண் நான் என் வீட்டிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன் என கூறியிருக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பகுதியில் பகிர்ந்திருந்தார் கிரண்.

வைரல் ஸ்க்ரீன் ஷாட்

வைரல் ஸ்க்ரீன் ஷாட்

ஆனால் அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த பதிவு அவரது இன்ஸ்டா பக்கத்தில் இல்லாமல் போனது. இதனால் குழப்பமடைந்துள்ளனர் ரசிகர்கள். உண்மையிலேயே கிரண்தான் அந்த பதிவை ஷேர் செய்தாரா அல்லது அவரது பெயரில் இப்படி ஒரு ஸ்க்ரீன் ஷாட் வைரலாகி வருகிறதா என தெரியவில்லை.

இன்னும் 3 நாட்கள்தான்

இன்னும் 3 நாட்கள்தான்

அதே நேரத்தில் கிரண் கேட்ட தொகையை கொடுக்காததால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் நடிகை கிரண் குறித்த இந்த தகவல் ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Anitha Sampath Bigg Boss ல் கலந்துகொள்ள போகிறாரா? | 4th October 2020
அன்பே சிவம்

அன்பே சிவம்

இதனிடையே நடிகை கிரண் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் வரலாம் என்றும் கூறப்படுகிறது. நடிகை கிரண் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X