Kiran - இன்ஸ்டாகிராமில் கலக்கும் கிரண்.. வேற லெவல் ஃபோட்டோஸ்.. சொக்கிப்போன ரசிகர்கள்

சென்னை: Kiran (கிரண்) நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்த கிரண் தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். சரண் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. பக்கா ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவான ஜெமினி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முதல் படமே மெகா ஹிட்டானதால் கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

Actress Kiran Uploaded Her New Photos in Instagram

அன்பே சிவம்: அவரது கரியரில் முக்கியமான படமாக கருதப்படுவது சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம். இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. அப்படத்தில் கிரண் கமிட்டானதும் அக்காலகட்டத்தில் பலரும் ஆச்சரியம்தான் பட்டனர். ஆனால் அதில் ஆச்சரியப்படுதவத்ற்கு ஒன்றுமே இல்லை என்பது போல் பாலா கேரக்டரில் கிரண் அருமையாக நடித்திருந்தார்.தொடர்ந்து வில்லன், வின்னர் என ஹிட் படங்களில் நடித்தார்.

ஓரங்கட்டப்பட்ட கிரண்: தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்ததால் பெரிய ரவுண்டு வரலாம் என நினைத்திருந்தார் கிரண். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து விஜய், விஷாலுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு முழுவதுமாக ஒதுங்கியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார். இப்போது பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.

Actress Kiran Uploaded Her New Photos in Instagram

கிரண் பேட்டி: சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் பேசிய அவர், "எதற்காக என்னை சினிமா உலகம் ஓரங்கட்டியது என்றே தெரியவில்லை. அது மட்டுமின்றி எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை திருமணம் நடந்துவிட்டது. நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். அது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது" என்று விரக்தியுடன் பேசியிருந்தார்.

கிரண் புகைப்படங்கள்: அதேபோல் திரைப்படங்களிலிருந்து அவர் ஒதுங்கியிருந்தாலும் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிவது வழக்கம். இந்தச் சூழலில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் கிரண். அந்தப் புகைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. கிரண் கூலர்ஸ் அணிந்தபடி இருக்கும் அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

Actress Kiran Uploaded Her New Photos in Instagram

எதற்காக புகைப்படம்?: முன்னதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பதிவிடுவது குறித்து பேசியிருந்த கிரண், 'நான் சினிமாவில் நடிப்பதற்கு இன்னமும் தயாராகத்தான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காகத்தான் புகைப்படங்களை பதிவிடுகிறேன்' என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே லியோ படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: kiran கிரண்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X