Big Boss 7 - பிக்பாஸ் 7 - என்னது இந்த நடிகையும் வீட்டுக்குள் போறாங்களா?.. அப்போது போட்டிக்கு பஞ்சமே இருக்காது

சென்னை: Kiran in Big Boss 7 (பிக்பாஸ் 7ல் கிரண்) பிக்பாஸ் சீசன் 7ல் நடிகை கிரண் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கடந்த சீசனில் ஜிபி முத்து, தனலட்சுமி, அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட 20 பேர் கலந்துகொண்டனர். அந்த சீசனில் ஷிவினுக்கு, விக்ரமனுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். முக்கியமாக அறம் வெல்லும் என்ற வார்த்தையை விக்ரமனுக்காக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யவும் ஆரம்பித்தனர். ஆனால் கடைசியில் அசீம் பிக்பாஸ் ஆறாவது சீசன் டைட்டிலை வென்றுவிட்டு சென்றார்.

 Actress Kiran Will Participating in Big Boss 7

பிக்பாஸ் 7: இந்தச் சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கவிருக்கிறது. இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போவதாக சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கமல் ஹாசன் அறிவித்திருந்தார். இரண்டு வீடுகளில் நடக்கும் போட்டியை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

போட்டியில் யார் யார்?: பிக்பாஸ் ஏழாவது சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப் கோவையில் பேருந்து ஓட்டிய ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்‌ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், விஜே பார்வதி, விஜே பாவனா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

புதிய தகவல்: இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7ல் நடிகை கிரணும் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஃபீல்ட் அவுட்டில் இருக்கும் கிரண் சமீபத்தில் கொடுத்த பேட்டியின் மூலம் மீண்டும் ரசிகர்களிடன் நினைவுக்குள் வந்தார். எனவே அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

கிரண்: ஜெமினி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிரண். அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம், பிரசாந்த்துடன் வின்னர் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார். மேலும் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் ஒரு பாடலில் கிரண் நடனம் ஆடியிருக்கிறார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X