செக் மோசடியில் 6 மாதம் சிறை.. கம்பி எண்ணபோகும் நடிகை.. அஜித், சூர்யா, விக்ரம் படங்களில் நடித்தவர்!
மும்பை: காசோலை மோசடி வழக்கில் துணை நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்டவர் கோய்னா மித்ரா. மாடலான இவர் பல்வேறு பாலிவுட் படங்களில் கவுரவ தோற்றங்களில் நடித்துள்ளார்.
சைக்காலஜி படித்துள்ள கோய்னா மித்ரா, 2001ஆம் பியூட்டி பீஜியன்ட் மேகா மாடல் பட்டத்தை கைப்பற்றினார். பல நாடுகளில் அழகிப் போட்டிகளையும் நடத்தியுள்ளார் கோய்னா மித்ரா.

ஹனி ஹனி பாடல்
இவர் தமிழில் அஜித் நடித்து வெளியான ‘அசல்' படத்தில் சிறு வேடத்தில் நடித்து உள்ளார். இதேபோல் 2009ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘அயன்' படத்தில் வரும் ‘ஹனி, ஹனி' பாடலில் நடனமாடியுள்ளார்.

மாடல் அழகியிடம் கடன்
விக்ரம் நடித்த தூள் படத்திலும் கொடுவா மீசை அருவா பார்வை என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார். இவர் பூனம் செதி என்ற மாடல் அழகியிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

பவுன்ஸ் ஆன செக்
கடனை திருப்பி கொடுக்க 2013-ம் ஆண்டு நடிகை கோய்னா மித்ரா அவருக்கு ரூ.3 லட்சத்துக்கான செக்கை கொடுத்து உள்ளார். ஆனால் நடிகையின் வங்கிக்கணக்கில் பணமில்லாமல் செக் பவுன்ஸ் ஆகி திரும்பி வந்துள்ளது.

நடிகை மீது வழக்கு
இதுகுறித்து கேட்டபோதும் கோய்னா மித்ரா முறையாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இந்த மோசடி குறித்து மாடல் அழகி பூனம் செதி, நடிகை கோய்னா மித்ரா மீது மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

6 மாதம் ஜெயில்
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நடிகை கோய்னா மித்ராவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் மாடல் அழகி பூனம் செதிக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை நடிகை கோய்னா மித்ரா கொடுக்க வேண்டும் என தீர்ப்பு கூறியது.

ஹைகோர்ட்டில் மேல்முறையீடு
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை கோய்னா மித்ரா மறுத்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











