Komal Sharma: இதெல்லாம் சட்டப்படி குற்றம்.. நடிகை கோமல் ஷர்மா பெயரில் நடக்கும் பண மோசடி!

சென்னை: சட்டப்படி குற்றம், ஊதாரி, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை கோமல் ஷர்மாவின் பெயரில் பண மோசடி நடப்பதாக அந்த நடிகையே தனது ரசிகர்களை உஷாராக இருக்கச் சொல்லி எச்சரித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த மாடல் அழகியான கோமல் ஷர்மா தமிழ், இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.

Actress Komal Sharma alerts her fans over money fraud happens with her name

மோகன்லாலின் மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம் மற்றும் அவர் இயக்கத்தில் உருவாகி வரும் பாரோஸ் உள்ளிட்ட படங்களிலும் கோமல் ஷர்மா நடித்து வருகிறார்.

கைவசம் ஏகப்பட்ட படங்கள்: சட்டப்படி குற்றம் படத்தின் மூலம் 2011ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கோமல் ஷர்மா. நாகராஜன் சோழன் எம்.எல்.ஏ, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர், தற்போது ஷாட் பூட் த்ரீ, பப்ளிக் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

Actress Komal Sharma alerts her fans over money fraud happens with her name

பாலிவுட்டில் வெளியான ஹங்காமா 2 படத்தில் நடித்த இவர் மோகன்லால் இயக்கி நடித்து வரும் பாரோஸ் எனும் மலையாளப் படத்திலும் படு பிசியாக நடித்து வருகிறார்.

பிகினி உடையில்: சினிமாவில் படு கவர்ச்சியாக நடித்து வரும் நடிகை கோமல் ஷர்மா சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கே கருப்பு நிற பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஜில் ஆக்கி உள்ளார்.

Actress Komal Sharma alerts her fans over money fraud happens with her name

கடலில் குதித்து சொட்டச் சொட்ட நனைந்து இருக்கும் ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.

பண மோசடி: சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கோமல் ஷர்மா பெயரிலேயே மர்ம நபர் ஒருவர் பண மோசடி வேலையை பார்த்துள்ள விஷயம் நடிகைக்கே தெரிந்து ஷாக் ஆக்கியது.

நடிகையின் பெயர் மற்றும் புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சரில் வைத்து ஆசை வலை காட்டியும் பணம் பறித்தும் அந்த நபர் வருவதாக கூறுகின்றனர்.

Actress Komal Sharma alerts her fans over money fraud happens with her name

எச்சரிக்கை விடுத்த நடிகை: இந்நிலையில், அந்த நபரின் நம்பரை ஷேர் செய்த நடிகை கோமல் ஷர்மா இது என் பெயரில் இருக்கும் போலியான போன் நம்பர் என்றும் இதன் மூலம் பண மோசடி நடக்கிறது. யாரும், இந்த மோசடி வலையில் விழுந்து விட வேண்டாம். எச்சரிக்கையாக இருங்க, நான் யாரிடமும் பணம் கேட்கப் போவதில்லை. யாராவது என் பெயரை பயன்படுத்தி சந்தேகப்படும்படி மெசேஜ் செய்தால் உடனடியாக உஷாராகி விடுங்க என்று அலர்ட் செய்துள்ளார் கோமல் ஷர்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X