செல்வராகவனின் புதிய படம்.. ரீ என்ட்ரி கொடுக்கும் 90ஸ் ஃபேவரைட் நடிகை.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன் தனது இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்திலேயே முக்கியமான இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். தொடர்ந்து படங்கள் இயக்கி வரிசையாக கொடுத்த அவர்; ஒருகட்டத்தில் இயக்குநராக தோல்வியடைந்தார். உடனடியாக ரூட்டை மாற்றிய அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
செல்வராகவன் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை பாதிக்கட்டத்தில் செல்வாவின் கைகளுக்கு வந்தது. அதனையடுத்து தன்னுடைய பதின்ம வயதிலேயே எந்த வித பதற்றமுமின்றி அந்தப் படத்தை இயக்கி முடித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்துக்கு கைக்கொடுக்க ஓரளவு அடையாளப்பட்டது படம்.
காதல் கொண்டேன்: இரண்டாவது படமாக அவர் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம்தான் தனுஷுக்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும், செல்வராகனவுக்குள் மிகச்சிறந்த இயக்குநர் இருக்கிறார் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பித்தது. இன்றுவரை அந்தப் படம் பலரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அவர் இயக்கிய பல படங்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் கவனம்: இடையில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்த செல்வராகவன்; தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமான திருமணம் அன்போடு சென்றுகொண்டிருக்கிறது. இயகக்த்திலிருந்து இப்போது ஒதுங்கியிருக்கும் அவர் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.அப்படி அவர் பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

புதிய படம்: இந்நிலையில் செல்வராகவன் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ட்ரிப், தூக்குதுரை ஆகிய படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இப்போது ஒரு படத்தை இயக்குகிறார். அதில்தான் செல்வராகவன் லீடு ரோலில் நடிக்கவிருக்கிறார். அவருடன் கன்னட திரையுலகத்தை சேர்ந்த குஷி ரவியும் நடிக்கிறார். முக்கியமாக 90களில் ஃபேமஸ் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த கௌசல்யாவும் இதில் கமிட்டாகியிருக்கிறார்.
சூப்பர் நடிகை கௌசல்யா: முன்னதாக கௌசல்யா கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தவர். காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கௌசல்யா விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பெரிய ரவுண்டு வர ஆரம்பித்த அவருக்கு திடீரென சினிமா வாய்ப்புகள் குறைந்தன. பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; திருமலை படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் ரவுண்டு?: அதன் பின்பும் சிறிது பிரேக் எடுத்த அவர் சந்தோஷ் சுப்ரமணியம், நட்பே துணை ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் மீண்டும் ஒதுங்கினார். இப்போது சில காலம் கழித்து தமிழில் அவர் நடிக்க கமிட்டாகியிருப்பதால் இனிமேலாவது கோலிவுட்டில் அவர் தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











