தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது… சகலகலா வில்லி ‘கோவை சரளா‘ .. மிரட்டல் லுக் !
சென்னை : தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரம்மாவுக்குப் பிறகு காமெடியில் உயர்ந்த இடத்தில் இருப்பவர் கோவை சரளா.
தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாவும் நிகழ்ந்து வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலொச்சி உள்ள கோவை சரளா. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

கோவை சரளா
1983ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் கோவை சரளா. அனைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படத்தில் நடித்த கோவை சரளா, சின்னவீடு திரைப்படத்தில் பாக்யராஜின் அம்மாவாக நடித்தார். இளம் வயதிலே அம்மா கதாபாத்திரத்தை ஏற்று கச்சிதமாக நடித்து பெயரும் எடுத்தார் கோவை சரளா.

சௌப்பான சுந்தரி
கவுண்டமணி, செந்தில் கூட்டணியில் கரகாட்டக்காரன் திரைப்படம் இவரை புகழின் உச்சுக்கு கொண்டு சென்றது. இந்த படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடிக்கு ஈடான காமெடி இதுவரை இல்லை என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் சௌப்பான சுந்தரி பெயர் புகழிக்கும் கோவை சரளா தான் பிள்ளையார் சுழி போட்டது.

750 திரைப்படங்கள்
கவுண்டமணி,செந்தில், கூட்டணியைத் தொடர்ந்து வடிவேலுவுடன் கூட்டணி சேர்ந்த இவர் புகழின் உச்சிக்கே சென்றார். கிட்டத்தட்ட 750 படங்களுக்கு மேல் நடித்த கோவை சரளா. நடிகர் கமலுடன் சதிலீலாவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். கோவை ஸ்லாங்கில் பட்டைய கிளப்பினார். மேலும், அந்த படத்தில் கமலுடன் இணைந்து மாருகோ... மாருகோ பாடலை பாடி பாடகியாகவும் மாறினார்.

சிநேகிதனய்ய்.. சிநேகிதனய்ய்...
ஷாஜஹான் படத்தில் விவேக்குடன் சேர்ந்து நகைச்சுவையில் மிரட்டி இருப்பார். மேலும், அந்த படத்தில் சிநேகிதனய்ய்... சிநேகிதனய்ய்.. சிநேகிதனய்ய் என்ற டையலாக்கும்'தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது'என்ற வசனத்தையும் இளைய தலைமுறைகள் இன்று பேசிவருகின்றனர். நடிகை, துணை நடிகை, நகைச்சுவை நடிகை, பாடகி, டான்ஸ் என ஆச்சி மனோரமா எப்படி சகலத்திலும் பட்டையை கிளப்பினாரோ, அதே போல சகலத்திலும் புகுந்து விளையாடி வருகிறார் கோவை சரளா.

70 வயது மூதாட்டடியாக
அம்மா, அக்கா என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஆச்சி மானோரம் போல மிரட்டும் கோவை சரளா தற்போது, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள 'செம்பி'படத்தில் 70 வயது பெண் பயணியாக, மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











