அந்த நடிகையுடன் டேட்டிங் செய்தார் சுஷாந்த்.. ஹேப்பியாக இருந்தனர்.. பிரபல நடிகை போட்ட புது குண்டு!

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பிரபல நடிகையுடன் டேட்டிங்கில் இருந்ததாக நடிகை லிஸா மாலிக் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து இதுவரை தெளிவான முடிவு வரவில்லை. சுஷாந்த் மரண வழக்கை அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது.

முன்னுக்கு பின் முரண்

முன்னுக்கு பின் முரண்

இருப்பினும் சுஷாந்த் மரணம் தொடர்பாக நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக அவரது வீட்டு வேலைக்காரர்களும் அவரது நண்பர்களும் விசாரணையில்
அளித்துள்ள தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

வயிறு காலியாக இருந்தது

வயிறு காலியாக இருந்தது

அதாவது வேலைக்காரர்கள் சுஷாந்த் இறந்த நாளான ஜூன் 14ஆம் தேதி காலை ஜூஸ் குடித்ததாக தெரிவித்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுஷாந்தின் வயிறு காலியாக இருந்தது என்றும் அவர் எதையும் சாப்பிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெரும் சந்தேகம்

பெரும் சந்தேகம்

இது சுஷாந்த் மரண வழக்கில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்காரர்கள் மற்றும் சுஷாந்தின் நண்பர்கள் அளித்துள்ள தகவல்கள் விசாரணை அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிர காதல்

தீவிர காதல்

இந்நிலையில் நடிகை சுஷாந்த் குறித்து பிரபல நடிகையான லிஸா மாலிக் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை கிருதி சனோன் இடையிலான உறவு குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது சுஷாந்தும் கிருதியும் காதல் உறவில் தீவிரமாக இருந்ததாக லிஸா தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியாக இருந்தார்

மகிழ்ச்சியாக இருந்தார்


சுஷாந்தை தொழில் ரீதியாக அறிந்த லிசா, பிறந்தநாள் விழாவின் போது கிருதியுடன் காதலில் இருந்த சுஷாந்த் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லிசா, "சுஷாந்தை நான் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கிருதியுடன் இருந்தபோது சந்தித்தேன்.

மகேஷ் ஷெட்டியின் தோழி

மகேஷ் ஷெட்டியின் தோழி


பாந்த்ரா கிளப்பில் கிருதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது நான் சந்தித்தேன். அவர் எப்போதும் மிகவும் அழகானவர், அவர் ஒரு பார்ட்டிக்கு சென்றார் மக்களின் முகத்தில் ஒரு புன்னகையைப் பெறுவார். மகேஷ் ஷெட்டி போன்ற எங்களுக்கு நிறைய பொதுவான நண்பர்கள் இருந்தனர்.

பிஸியாக இருந்தார்

பிஸியாக இருந்தார்


"அவர் ஒரு வேடிக்கையான அன்பான பையன், அவர் நகைச்சுவை உணர்வை சரியான இடத்தில் வைத்திருந்தார், எப்போதும் எப்போதும் ஜோக் செய்து கொண்டு எனர்ஜிட்டிக்காக இருந்தார்." என்று கூறினார் லிஸா. மேலும் சுஷாந்த் மற்றும் கிருதியின் உறவு குறித்து விசாரித்தபோது, அது ஒரு பப்ளிக் பார்ட்டி மற்றும் பிறந்தநாள் விழாவாக இருக்கும்போது, அதை வழங்குபவர் எப்போதும் பிஸியாக இருப்பார்.

பேசி சிரித்து..

பேசி சிரித்து..


ஆகவே, அது ஒரு பெரிய விருந்து என்பதால் கிருதி விருந்தினர்களுடன் கலந்துகொள்வதில் மும்முரமாக இருந்தார். சுஷாந்த் அனைவரையும் ஊக்கப்படுத்திக் கொண்டு நடனம் ஆடுவது, பாரில் ஒரு டிரிங்க்ஸ் பெறுவது மற்றும் மற்றவர்களுடுன பேசி சிரித்துக் கொண்டிருந்தார்.

டேட்டிங் செய்தார்கள்

டேட்டிங் செய்தார்கள்

அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர், அவர்கள் நல்ல ஹோஸ்ட்டாக இருக்க முயற்சித்தார்கள். அவர்கள் டேட்டிங் செய்தார்கள். 'ராப்தா' படத்தில் ஒன்றாக நடித்த கிருதி சனோன் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் இருவரும் அவர்களின் காதலை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

அங்கிதா லோகண்டே

அங்கிதா லோகண்டே

சுஷாந்தும் கிருதியும் 2017ஆம் ஆண்டு வெளியான ராப்டா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஏற்கனவே சுஷாந்த், தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த அங்கிதா லோகண்டேவை 6 ஆண்டுகள் காதலித்தார். 2016ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

Recommended Video

நடிகை ரியா சக்கரவர்த்தி எந்த சிறையில் அடைக்கப்பட்டார்? தற்போதைய நிலை என்ன!
சாரா அலிகான்

சாரா அலிகான்


அதன்பிறகு சுஷாந்த் ரியா சக்ரவர்த்தியை காதலித்து வந்தார். இதற்கு முன்னதாக ஷாந்த் சிங்கும் சாரா அலி கானும் கேதார்நாத் படப்பிடிப்பின் போது, ஒருத்தரை ஒருத்தர் காதலித்து வந்தனர் என சுஷாந்த் சிங்கின் நண்பர் சாமுவேல் ஹோகிப், கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை லிஸா மாலிக் சுஷாந்தும் கிருதியும் டேட்டிங்கில் இருந்ததாக கூறியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X