இதுக்கு போடாமலே இருந்திருக்கலாம்.. நடிகையின் கிழிந்த பேன்ட், உள்ளாடையை பார்த்து ரசிகர்கள் கிண்டல்!
மும்பை: கிழிந்த பேன்டை போட்டு பேஷன் என போஸ் கொடுத்த ஜீவி பிரகாஷ் பட நடிகையை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.
நடிகை க்ரித்தி கர்பண்டா இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் 2009ஆம் ஆண்டு வெளியான போனி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தொடர்ந்து கன்னடம் தெலுங்கு, இந்தி, தமிழ் என பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜீவி.பிரகாஷ் உடன் புருஸ் லீ என்ற படத்தில் நடித்து உள்ளார்.

விருதுகள்
தமிழில் வான் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதுகளை பெற்றுள்ளார்.

அதகளப்படுத்தும் போட்டோ
க்ரித்தி அவ்வப்போது கவர்ச்சி படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காடச் செய்வார். அந்தவகையில் அண்மையில் க்ரித்தி ரசிகர்களை அதகளப்படுத்தும் வகையில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சட்டையை திறந்துபோட்டு
அதில் அவர் போட்டிருக்கும் பேன்ட் இரண்டு தொடைகளும் முழுவதும் தெரியும் வகையில் நார் நாராய் கிழிந்து போயிருந்தது. இதேபோல் டாப்பிலும் உள்ளாடை தெரியும் வகையில் சட்டையை திறந்துபோட்டு கிளாமராக போஸ் கொடுத்திருந்தார்.
செக்ஸியா இருக்கீங்க
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இது என்னம்மா டிரெஸ்? இதற்கு வெறும் டூ பீஸ் உடன் போஸ் கொடுத்திருக்கலாம் என கிண்டலடித்துள்ளனர். சிலர் இந்த போட்டோவில் நீங்கள் க்யூட்டாக இருக்கிறீர்கள் என்றும் சிலர் செக்ஸியாக இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











