ஜெ அன்பழகனுக்காக டிவிட்டர் புரொஃபைல் பிக்சரை மாற்றிய பிரபல நடிகை.. மிஸ் பண்ணுவோம் என உருக்கம்!
சென்னை: மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனுக்காக பிரபல நடிகை ஒருவர் தனது டிவிட்டர் புரஃபைல் பிக்சரை மாற்றியுள்ளார்.
Recommended Video
திமுக எம்எல்ஏவான ஜெ அன்பழகன் கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திமுக மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை பிரபலங்களும் வைரமுத்துவின் மறைவுக்கு தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

திமுகவில்..
இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக 5 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றினார்.

புரஃபைல் போட்டோ
அப்போது ஜெ அன்பழகனுடன் இணைந்து பணி புரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் அவரது மறைவை தொடர்ந்து டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு தனது புரஃபைல் பிக்சரை மாற்றியுள்ளார்.

மிஸ் பண்ணுவோம்
அதில் தனது போட்டோவுக்கு பதிலாக, மறைந்த எம்எல்ஏ ஜெ அன்பழகனின் போட்டோவை வைத்துள்ளார். மேலும் வலுவான, தீவிரமான, முட்டாள்தனமற்ற, ஸ்ட்ரைட் ஃபார்வர்டு, காரணத்திற்கான கலகக்காரர்.. உங்களை மிஸ் பண்ணுவோம் என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர்..
62 வயதான ஜெ அன்பழகன், மூன்று முறை திமுக எம்எல்ஏவாக இருந்தார். அதோடு திரைத்துறையிலும் அன்பு பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் வந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











