36 வருஷமா அப்பாவை பார்க்கவே இல்லை.. அதற்காக வருத்தப்படவும் இல்லை.. குஷ்பூ பளீச்!

சென்னை : நடிகை குஷ்பூ பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவக்கினாலும் அவரை சிறப்பாக தூக்கி விட்டது தென்னிந்திய மொழிப்படங்கள்தான்.

ரஜினி, கமல், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ள குஷ்பூ, வெங்கடேஷ், நாகார்ஜுனா என தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது தயாரிப்பாளர், நடிகை, அரசியல்வாதி, சின்னத்திரை நடிகை, சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர், ரியாலிட்டி ஷோக்களின் நடுவர் என பன்முகத்திறமையை காட்டி வருகிறார் குஷ்பூ.

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ தனது 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் நடிக்கத் துவங்கியவர். குழந்தை நட்சத்திரமாக 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த குஷ்பூ, தொடர்ந்து நாயகியாகவும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஆனால் அவரது அடுத்தடுத்த படங்கள் ப்ளாப் ஆகவே, அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, தெலுங்கில் வெங்கடேஷடன் இணைந்து நடித்து தன்னுடைய அறிமுகத்தை செய்துக் கொண்டார்.

குழந்தை நட்சத்திரமாக குஷ்பூ

குழந்தை நட்சத்திரமாக குஷ்பூ

நடிகை குஷ்பூ, சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரது அண்ணனின் நண்பர் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். சிறுவயதிலேயே சூட்டிங்கிற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர். தொடர்ந்து தன்னுடைய அப்பாவின் பணத்தாசையால், பணத்திற்காக சரியான படங்களை தேர்வு செய்யாமல், பாலிவுட்டில் தனக்கு அடுத்தடுத்த பிளாப் படங்கள் அமைந்ததாக தற்போது தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

இதையடுத்து தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தொடர்ந்து வெங்கடேஷ், நாகார்ஜுனா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததாகவும் அப்படி ஒரு சூட்டிங்கின்போது ஏவிஎம்மில் நடிகர் பிரபுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் மூலமாகவே தர்மத்தின் தலைவன் படத்தில் அவருக்கு ஜோடியாகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாகவும் தனது சமீபத்திய பேட்டியில் நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

அப்பாவை உதறித்தள்ளிய குஷ்பூ

அப்பாவை உதறித்தள்ளிய குஷ்பூ

ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பாவின் தலைமையை உதறித்தள்ளும் சூழல் ஏற்பட்டதாகவும் சென்னை வந்த தான் கடந்த 36 ஆண்டுகளாக தன்னுடைய தந்தையை சந்திக்கவில்லை என்றும் அதுகுறித்து தனக்கு எப்போதுமே வருத்தம் ஏற்பட்டதில்லை என்றும் குஷ்பூ தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். குஷ்பூவிற்கு மூன்று அண்ணன்கள் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் சின்னத்தம்பி படத்தில் வருவது போலவே தன்னை கொண்டாடியதாகவும் குஷ்பூ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரபுவுடன் முதல் படம்

பிரபுவுடன் முதல் படம்

நடிகை குஷ்பூ, தர்மத்தின் தலைவன் படத்தை தொடர்ந்து கார்த்திக்குடன் வருஷம் பதினாறு, மீண்டும் பிரபுவுடன் சின்னத்தம்பி உள்ளிட்ட வெற்றிப்படங்களை தன்னுடைய ஆரம்ப காலகட்டத்திலேயே கொடுத்தவர். தொடர்ந்து தற்போது வரை மிகவும் பிசியாகவும் வெற்றி நாயகியாகவும் வலம் வருபவர். நடிகரும் இயக்குநருமான சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்நாட்டு மருமகளாக மாறியவர். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பன்முகங்கள் காட்டும் குஷ்பூ

பன்முகங்கள் காட்டும் குஷ்பூ

இந்நிலையில் அவ்னி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் நடிகை குஷ்பூ, அடுத்தடுத்த படங்கள், சின்னத்திரை சீரியல்கள் என தயாரித்து வருகிறார். மேலும் படங்களிலும நடித்து வருகிறார். சின்னத்திரையில் சீரியல்களிலும் நடித்துவரும் குஷ்பூ, முழுநேர அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தன்னுடைய தந்தையால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறி அதிரடி கிளப்பினார். இதனிடையே தற்போதைய பேட்டியில் கடந்த 36 ஆண்டுகளாக தான் தன்னுடைய தந்தையை சந்திக்கவில்லை என்றும் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X