என் பக்கத்தில் சுந்தர் இருந்தால்.. ரொமான்ஸ் மூடில் கணவருடன் குஷ்பூ வெளியிட்ட கிளிக்ஸ்!

சென்னை : நடிகை குஷ்பூ சினிமா, அரசியல் என அடுத்தடுத்த தளங்களில் சிறப்பாக பயணித்து வருகிறார்.

சினிமாவின் முன்னணி நடிகையாக கனவுக்கன்னியாக ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக இருந்தவர் குஷ்பூ.

தற்போது சினிமாவிலும் நடித்துவரும் குஷ்பூ, தயாரிப்பு, சீரியல் தயாரிப்பு, ரியாலிட்டி ஷோக்கள் என பன்முகம் காட்டி வருகிறார்.

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ ரசிகர்களின் கனவுக்கன்னியாக ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். கொழுக் மொழுக்கென ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக இருந்த குஷ்பூவிற்கு கோயில் கட்டிய சம்பவங்களும் தமிழ்நாட்டில் நடைபெற்றது. இதேபோல புசுபுசு இட்லிக்கு குஷ்பூ என்று பெயரிட்டு ரசிகர்கள் தங்களது சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டனர். தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்த குஷ்பூ, ஒருகட்டத்தில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்நாட்டு மருமகளானார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அரண்மனை 4 படத்தை இயக்கும் சுந்தர் சி

அரண்மனை 4 படத்தை இயக்கும் சுந்தர் சி

குஷ்பூ மற்றும் சுந்தர் சி இருவரும் இணைந்து படங்களை தயாரித்து வருகின்றனர். பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளனர். இவர்களின் அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சுந்தர் சியும் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் காபி வித் காதல் என்ற படம் வெளியான நிலையில், அடுத்ததாக அரண்மனை 4 படத்தை இயக்கவுள்ளார்.

ஹீரோவாக மீண்டும் சுந்தர் சி

ஹீரோவாக மீண்டும் சுந்தர் சி

அரண்மனை 4 படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி நாயகனாக கமிட்டான நிலையில், அவர் படத்திலிருந்து விலகிக்கொள்ள, தற்போது சுந்தர் சியே நாயகனாக நடிக்கவுள்ளார். படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா என இரு நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதனிடையே நடிப்பு, தயாரிப்பு, அரசியல் என பன்முகம் காட்டிவரும் நடிகை குஷ்பூ, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தன்னுடைய உடலை கணிசமாக குறைத்து, ஸ்லிம்மாக மாறியுள்ளார் குஷ்பூ. இதுகூட உங்களுக்கு நல்லாதாங்க இருக்கு என்று ரசிகர்கள் உருகுகின்றனர். வயதுக்கு வந்த பெண்கள் இருவர் இருந்தாலும் இன்னமும் குஷ்பூ ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாகவே காணப்படுகிறார்.

சுந்தர் சியுடன் புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ

சுந்தர் சியுடன் புகைப்படங்களை பகிர்ந்த குஷ்பூ

இவரது இரு மகள்களில் அவ்னி, தற்போது நடிப்புப் பயிற்சி பெற்று வருகிறார். விரைவில் இவர் நாயகியாக அறிமுகம் ஆகவுள்ளார். மற்றொருவர் தயாரிப்பாளராக மாஸ் காட்டவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் நடிகை குஷ்பூ தற்போது இன்ஸ்டாகிராமில் சுந்தர் சியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மிகவும் அழகான க்யூட் தம்பதியான இவர்கள் இந்தப் படங்களில் சிறப்பாக உள்ளனர்.

நான் விரும்பும் மனிதன்

நான் விரும்பும் மனிதன்

மேலும் தான் விரும்பும் மனிதன் என்றும் சுந்தர் சி தன்னருகில் இருந்தால் மிகவும் அழகான தருணமாக அது மாறிவிடுவதாகவும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் தனியாகவும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் குஷ்பூ. இதேபோல துபாய்க்கு சென்றபோது நடிகைகள் மீனா, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார் ஆகியோருடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் குஷ்பூ பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X