ஒட்டிப்போன முகத்துடன் அடையாளம் தெரியாமல்..யார் இது குஷ்புவா? அல்லது ஃபேஸ் ஆப்-ஆ?

சென்னை :நடிகை குஷ்பூ சமூக வலைதளங்களில் மிகவும் சிறப்பாக செய்லபட்டு வருகிறார்.

மல்டி டாஸ்கில் அவர் பல விஷயங்களை செய்து வருகிறார். பயணங்களையும் அழகாக மேற்கொள்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு அழகான மெசேஜையும் அவர் பகிர்ந்துள்ளார்.

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ போல சிறப்பான மற்றும் அதிகமான ரசிகர்களை பெற்றவர்கள் யாரும் இருக்க முடியாது. 90களில் சிறப்பான நாயகிகளில் முன்னணியில் இருந்தவர் குஷ்பூ. கமல், ரஜினி, சத்யராஜ், விஜய்காந்த், சரத்குமார் என இவர் ஜோடி போடாத முன்னணி நடிகரே இல்லை என்று கூறலாம்.

நடிகையாகும் குஷ்பூ மகள்

நடிகையாகும் குஷ்பூ மகள்

ஒரு கட்டத்தில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்நாட்டு மருமகளாக மாறினார் குஷ்பூ. இவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஒருவர் தற்போது நடிப்புக்கான படிப்பை வெளிநாட்டில் படித்துவிட்டு நடிகையாக தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்த தகவலை குஷ்பூ வெளியிட்டிருந்தார்.

ஸ்லிம்மாக மாறிய குஷ்பூ

ஸ்லிம்மாக மாறிய குஷ்பூ

குஷ்பூ என்றால் கொழுக் மொழுக் என்று குண்டாக இருப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். ஒரு கட்டத்தில் இவருக்கு கோயில் கட்டினார்கள் ரசிகர்கள். மேலும் குஷ்பூ இட்லி என்று குண்டு இட்லிக்கும் பெயரிட்டு மகிழ்ந்தனர். இந்நிலையில் அந்த குண்டான உடல்வாகை குறைத்து தற்போது ஸ்லிம் அழகியாக மாறியுள்ளார் குஷ்பூ.

குட்டை கவுனில் குஷ்பூ

குட்டை கவுனில் குஷ்பூ

அவரை பார்த்தால் அவரது மகளை பார்ப்பதாக தோன்றுவதாகவும், பிரம்மா படத்தில் குஷ்பூ எப்படி இருந்தாரோ அப்படி மாறியுள்ளதாகவும் ரசிகர்கள் அவரது சமீபத்திய பதிவிற்கு கமெண்ட் செய்திருந்தனர். அதற்கேற்றாற்போல அந்த புகைப்படத்தில் கவுனுடன் காணப்பட்டார் குஷ்பூ.

ஸ்லீவ்லெஸ்ஸில் குஷ்பூ

ஸ்லீவ்லெஸ்ஸில் குஷ்பூ

இந்நிலையில் தற்போதைய புதிய பதிவில், ஸ்லீவ்லெஸ்ஸில் காரில் அமர்ந்தபடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் குஷ்பூ. இதை பார்த்த ரசிகர்கள் இது குஷ்பூவா என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் உங்களுடைய பயணங்களை அழகாக்குங்கள் என்றும் கேப்ஷனில் குஷ்பூ தெரிவித்துள்ளார். இலக்கை நோக்கிய பயணங்கள் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு கணத்தையும் அழகான நினைவாக மாறறுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை ஈர்த்த பதிவு

ரசிகர்களை ஈர்த்த பதிவு

இந்தப் பதிவு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ஏராளமானோர் சிறப்பான கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர். தற்போது மீரா சிரியல், ரியாலிட்டி ஷோக்கள், தயாரிப்பு பணிகள், பயணங்கள் என பல விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை குஷ்பூ.

இது நிஜமா அல்லது ஏதாவது செயலி மூலம் முகத்தை மாற்றியுள்ளாரா?

இது நிஜமா அல்லது ஏதாவது செயலி மூலம் முகத்தை மாற்றியுள்ளாரா?

குஷ்பு மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிடுவார், அதற்கு பெரிய வரவேற்பு இருக்கும் பலரும் பாராட்டுவார்கள். ஆனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள அவர் வரும்போது கொஞ்சம் பூசினாற்போல் இருப்பார், சில நேரம் பழைய குஷ்பு போல குண்டாக தெரிவார். சில நாள் கழித்து மீண்டும் ஒல்லியான தோற்றத்துடன் இளமையாக இருப்பது போன்று படத்தை வெளியிடுவார். இதனால் நெட்டிசன்கள் குழப்பத்தில் தான் உள்ளனர். தற்போது வெளியிட்டுள்ள படத்தில் முகம் ஒட்டிப்போய் குஷ்புவா இது என கேட்கும் வகையில் உள்ளதால் ஏதாவது செயலி மூலம் முகத்தை ஒல்லியாக காட்டும் வகையில் படம் எடுத்து போட்டுள்ளாரா? என சிலர் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X