Khushbu Sundar: தமாக்காவிற்கு காத்திருக்க சொன்ன குஷ்பூ.. சுந்தர் சியின் அடுத்தப்படம் குறித்து அறிவிப்பு!
சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமைகளை கோலிவுட்டில் வெளிப்படுத்தி வெற்றி நாயகனாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார் சுந்தர் சி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அரண்மனை 4 படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக அவரது படம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அடுத்ததாக அவர் கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இயக்குநர் சுந்தர் சி: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல தளங்களில் செயல்பட்டு வரும் சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். கடந்து சில மாதங்களுக்கு முன்னதாக இவரது அரண்மனை 4 படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. படம் ரசிகர்களை சிறப்பாக என்டர்டைன் செய்து 100 கோடி கிளப்பிலும் இணைந்திருந்தது. இந்த படத்தில் முன்னதாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாத நிலையில் சுந்தர் சியே இந்த படத்தின் நாயகனாக கமிட் ஆகி நடித்திருந்தார்.
அரண்மனை 4 படம்: படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். முன்னதாக அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் அரண்மனை 4 படவும் அந்த வெற்றி கூட்டணியில் இணைந்து கொண்டது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் சுந்தர் சி. அடுத்ததாக அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்க உள்ள அவர் படத்தில் நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கலகலப்பு 3 குறித்த அறிவிப்பு: இந்நிலையில் கலகலப்பு 3 படம் குறித்து இன்றைய தினம் நடிகையும் சுந்தர் சியின் மனைவியுமான குஷ்பூ தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். கண்ணன் ரவி குரூப்புடன் இணைந்து சுந்தர் சி இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய கணவரின் அழகான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: அடுத்தடுத்து மூக்குத்தி அம்மன் 2 மற்றும் கலகலப்பு 3 படங்களை சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் எந்த படத்தின் ஷூட்டிங் முதலில் துவங்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக கடந்த 2012ம் ஆண்டில் வெளியான கலகலப்பு மற்றும் 2018ம் ஆண்டில் வெளியான கலகலப்பு 2 படங்கள் மிகப் பெரிய வெற்றியை சுந்தர் சிக்கு கொடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது கலகலப்பு 3 படம் குறித்த அறிவிப்பை நிறுவனத்தின் தயாரிப்பாளரான குஷ்பூ வெளியிட்டுள்ளார். இந்த படம் முந்தைய படங்களைப் போலவே காமெடியில் அதகளம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











